தமிழ்நாட்டில் கடந்த மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து நேற்று 12 ஆயிரம் என்ற அளவில் பதிவாகியது. தமிழ்நாட்டில் இன்று புதியதாக கொரோனாவால் 11 ஆயிரத்து 805 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 லட்சத்து 78 ஆயிரத்து 298 ஆக பதிவாகியுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 793 ஆகும். இதனால், சென்னையில் மட்டும் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 614 ஆகும். சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 11 ஆயிரத்து 12 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 464 ஆகும். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்த ஆண்கள் 13 லட்சத்து 92 ஆயிரத்து 357 ஆகும். பெண்கள் மட்டும் 9 லட்சத்து 85 ஆயிரத்து 903 நபர்கள் ஆவர். மூன்றாம் பாலினத்தவர் 38 நபர்கள் ஆவர்.
தமிழ்நாட்டில் மட்டும் இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 6 ஆயிரத்து 727 நபர்கள் ஆவர். பெண்கள் 5 ஆயிரத்து 78 நபர்கள் ஆவர். தமிழ்நாடு முழுவதும் இன்று கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 207 ஆகும். இதனால், மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 23 ஆயிரத்து 15 ஆகும்.
தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 267 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 119 பேர் தனியார் மருத்துவமனையிலும், 148 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இன்று 267 பேர் உயிரிழந்ததை அடுத்து, தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 68 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் 7 ஆயிரத்து 876 நபர்கள் இதுவரை கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 63 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள்,
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தற்போது ஓரளவு தணிந்து வருவது பொதுமக்கள் மத்தியில் ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தினசரி ஆயிரம் என்ற அளவில் பாதிப்பு குறநை்து வந்தாலும், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் ஒருபுறம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : கொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..!