உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்று  வைரஸ் பல்வேறு மாநிலங்களில் படிப்படியாக குறைந்து வருகிறது. அதேபோல் தமிழகத்தில் தமிழக அரசு கடந்த மாதத்தில் முழு ஊரடங்கு உத்தரவுகள் அறிவித்து, கடந்த 7-ஆம் தேதியில் கரூர் உட்பட 11 மாவட்டத்திற்கு சில தளர்வுகள் மட்டுமே அறிவித்து மீண்டும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்ததுள்ளது.


இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் மருத்துவ ஆலோசனை நடத்தியதில், இன்னும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நீடிக்க வேண்டும் எனவும், கரூர் உட்பட 11 மாவட்டத்திற்கு உள்ள சில தலைவர்களை நீக்கிவிட்டு ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில், நாள்தோறும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் மற்றும் சிகிச்சை பலனின்றி இறந்தோர் மற்றும் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்புவோர் எண்ணிக்கை மாநில சுகாதாரத் துறையின் சார்பாக நாள் தோறும் அறிவிப்பு வெளியாகி வருகிறது. இந்நிலையில் இன்று மாநில சுகாதாரத்துறை அறிவிப்பின்படி, கரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 172-ஆக உள்ளது. அதேபோல் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை 199-ஆக உள்ளது. எனவும், கரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 13 நபர்கள் சிகிச்சை பலனின்றி இறந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 




மாவட்டத்தில் கொரோனா தொற்று  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துவரும் நிலையில்,  கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறப்பு விகிதமும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தடுப்பூசி முகாமில் தடுப்பூசி கிடைக்காத நிலையில் பொதுமக்களை 5-வது நாளாக நாளையும் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை இணைந்து நாள்தோறும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் முகாமை நடத்திக் கொண்டுள்ளனர்.


காய்ச்சல் முகாம் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை நடைபெறுகிறது. இந்த காய்ச்சல் முகாமில் நோய்த்தொற்று அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகுமாறு, மருத்துவர்கள் பொதுமக்களை அறிவுறுத்துவார்கள். அதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை இணைந்து செயலாற்றி வருகிறது. 


எனினும், கரூர் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500-இல் இருந்து, தற்போது அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவரும் நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கரூர்வாசிகள் அச்சத்தில் உள்ளனர். அதேபோல் தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மாவட்ட போலீசார் அதிரடி வாகன ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நாள்தோறும் வாகன சோதனை மற்றும் வணிக நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் திறந்து இருந்தால் அவற்றை கண்காணிக்கும் உள்ளிட்ட பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி மற்றும் போலீசார் இணைந்து சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். மாவட்ட மக்கள் இன்னும் பல்வேறு இடங்களில் ஊரடங்கு விதிகளை மீறி வருவதாகவும், அவர்கள் வாகனத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்படுவதாகவும், போலீசார் தெரிவித்து வருகின்றனர்.


ஆகவே மாவட்ட மக்கள் மிகவும் எச்சரிக்கையாக முகக்கவசம், சமூக இடைவெளி, கைகழுவும் பழக்கத்தை இடைவிடாது செய்து வர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.