தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 6 ஆயிரத்து 162 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,70,283 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 6,162 ஆக உள்ளது.


இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 49 ஆயிரத்து 577 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 30 ஆயிரத்து 789 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 372 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 396 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 372 ஆக உள்ளது. கோவை 756, ஈரோடு 641, சேலம் 419, திருப்பூர் 386, தஞ்சாவூர் 305, செங்கல்பட்டு 262, நாமக்கல் 257, திருச்சி 235, திருவள்ளூர் 169, கடலூர் 151, திருவண்ணாமலை 164, கிருஷ்ணகிரி 146, நீலகிரி 138, கள்ளக்குறிச்சி 134, மதுரை 112,  ராணிப்பேட்டை 96, கன்னியாகுமரி 115, நாகை 108, தருமபுரி 102, விழுப்புரம் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.




கொரோனாவால் மேலும் 155 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31,901 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 98 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 57 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 15 பேர் உயிரிழந்தனர்.  கோவை 12, வேலூர் 10, ராணிப்பேட்டை 15, சேலத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 28 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 26 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 49,845 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 9,046 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 23,67,831 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.






12 வயதிற்குட்பட்ட 220 சிறார்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் குறைந்துள்ளது. குறைந்தபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 252 பேர் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர். 


பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். 


கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், கொரோனா 2வது அலையால் தொற்று பரவல் குறையாமல் மார்ச், மே மாதங்களில் அதிகமாகி வந்தது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடியது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், தொற்று குறைந்து வருவதால் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.