தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 5000க்கும் கீழ் குறைந்துள்ளது. 1,10,346 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,592 ஆக குறைந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 663 பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


கொரோனாவால் மேலும் 25 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,862 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 16 பேரும் தனியார் மருத்துவமனையில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர். 


மேலும் படிக்க: Rajini Nelson Combo: நெல்சனின் ப்ளாக் காமெடி ட்ராக்.. ரஜினியின் நகைச்சுவை ஹ்யூமர்! திரும்ப வரும் தில்லுமுல்லு ரஜினி!


தமிழ்நாட்டில் இருக்கும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படவிருக்கிறது. தேர்தலுக்கு பின்பு கொரோனா வைரஸ் தொட்டு கட்டுப்பாடுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த  சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு தற்போது அளிக்கப்பட்டுள்ளதற்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நோயின் எண்ணிக்கையும் பரவலையும் பொறுத்தே கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் இதேபோன்று தொடர்ந்து மக்கள் மாஸ்க் அணிந்து, தடுப்பூசி செலுத்திக்கொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கொரோனா கட்டுப்பாடுகளை சுகாதாரத் துறை முதற்கொண்டு யாரும் விரும்பவில்லை. பொதுமக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படாதவாறு, தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு வழி முறைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என பிரதமரும், தமிழக முதல்வரும் தெரிவித்துள்ளனர். கடந்த முறையைவிட இந்த முறை மருத்துவ கட்டமைப்புகள் தமிழ்நாட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளதால் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு தற்போதைக்கு வாய்ப்பில்லை என்றார். 


மேலும் படிக்க: Facebook | ஏகப்பட்ட பஞ்சாயத்து..! ஃபேஸ்புக், இன்ஸ்டா சேவைகளை நிறுத்த மெட்டா திட்டம்!






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண