மே 1 முதல் ஜூலை 13 வரையில் ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளை விட கூடுதல் தடுப்பூசிகளை நிர்வகித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு இதுவரை, 43.87 கோடிக்கும் அதிகமான (43,87,50,190) கொரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும்  வழங்கியுள்ளது. இதில், மொத்தம் 41,12,30,353 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.  நுகர்வு முறை (அ) பயன்படுத்தும் முறை, மக்கள் தொகை மற்றும் தடுப்பூசி வீணாகும் அளவு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில், தமிழகத்தை விட குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு கூடுதல் தடுப்பூசி டோஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  


கடந்த 20ம் தேதி நிலவரப்படி, தமிழகத்துக்கு 1,50,57,290 தடுப்பூசி டோஸ்களை  மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில்,1,62,14,280 பேருக்கு முதல்கட்ட தடுப்பூசியும், 35,36,983 பேருக்கு  இரண்டு கட்ட தடுப்பூசி டோஸ்களையும் தமிழ்நாடு அரசு நிர்வகித்துள்ளது (1,97,51,263).


மே 1ம் தேதி முதல் ஜூலை 13ம் தேதி ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளை விட, 5,88,243 கூடுதல் தடுப்பூசி டோஸ்களை தமிழ்நாடு அரசு நிர்வகித்துள்ளது. மேலும், நாட்டிலேயே கூடுதல் தடுப்போசிகளை பயன்படுத்திய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மேலும், இந்த காலகட்டத்தில் தடுப்பூசி வீணாகுதல் அளவு சைபராக உள்ளது. 


முன்னதாக, பொது சுகாதாராம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை முதன்மை பிறப்பு இறப்பு பதிவாளார் செல்வவிநாயகம் இதுகுறித்து கூறியதாவது, "அறிவியல் ரீதியாக 10 டோஸ் வயலில்    இதன் காரணமாக பொது மக்களுக்கு வழங்க வேண்டிய தடுப்பூசி அளவு எந்தளவும் குறையாது (0.5cc ). ஓவர்பில்  (overfill), டெட் ஸ்பேஸ் (Dead Space), சுகாதாரப் பணியாளர்களின் செயல்திறன் ஆகிய மூன்று காரனங்களால் இது சாத்தியப்படுகிறது" என்று தெரிவித்தார். 


         



 


மே 1ம் தேதிக்கு முந்தைய நிலை:        


தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி டோஸ் வீணாகும் அளவு அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளும் இதனை உறுதிபடுத்தின. 2021, மே 1ம் தேதி நிலவரப்படி, தடுப்பூசி பயன்படுத்துதலில்  தமிழ்நாடு 8.83 தடுப்பூசி டோஸ்கள் வீணானதாக தெரிவிக்கப்பட்டது.         


    


எதிர்க்கட்சிகள் கோரிக்கை:  தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தியது தொடர்பான வெள்ளை அறிக்கை மாநில அரசு வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்னதாக கோரிக்கை வைத்திருந்தார்.  மேலும், மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகள் ஒதுக்கீட்டில் தமிழகம் வீணடிப்பதைத் தரவுகளோடு விளம்பரப்படுத்த பிரதமர் தங்களுக்கு அறிவுரை வழங்கியதாக முன்னாள்  தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.     


மேலும், வாசிக்க:  


COVID-19 Vaccine : ‛தயக்கமல்ல தட்டுப்பாடே காரணம்’ தடுப்பூசி குறித்து பிரதீப் கவுர் கருத்து!