தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டவில்லை என ஐசிஎம்ஆர் தமிழகப் பிரிவு துணை இயக்குநர் பிரதீப் கவுர் தெரிவித்தார். 


கொரோனா தடுப்பூசி திட்டத்தில், தற்போது தமிழ்நாடு சந்திக்கும் மூன்று பிரச்சனைகளையும் அவர் பட்டியலிட்டார்.      



  1.  தடுப்பூசி விநியோகத்தில் உள்ள தட்டுபாடுகள் 

  2.  எங்க தடுப்பூசி டோஸ்கள் போடப்படுகிறது போன்ற முழுமயான தகவல்கள்  மக்களிடம் இல்லை, 

  3.  தடுப்பூசி மையங்களுக்கு செல்ல முதியவர்கள் சிரமங்களை சந்திக்கின்றனர். 


 






எனவே, தடுப்பூசி மையங்கள் தொடர்பான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பிரத்தியோக வாகன சேவைகள் மூலம்  தடுப்பூசி மையங்களுக்கு முதியவர்கள் அழைத்து வரப்பட்டு தடுப்பூசி டோஸ்கள் போட வேண்டும். மாநிலத்துக்கு தேவையான தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 


தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமானோர் (1,01,85,541 ), இதுவரை கொரோனா தடுப்பூச்சியை போட்டுக் கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதியானவர்களில், 13.8 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி டோஸ்களையும், வெறும் 3.6 சதவீதம் பேர் இரண்டாவது தடுப்பூசி டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளனர். 18 முதல் 44 வயதுடைய பயனாளிகளில், 19,50,577 பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கு தயக்கம் இருக்கிறதா?   


இந்தியாவில் மூன்றாவது கட்ட கொரோனா தடுப்பூசி போடப்படும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.  நாடு முழுவதும் உள்ள சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முதற்கட்ட பணிகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் 5,32,605 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், 23.77 லட்ச தடுப்பூசி டோஸ்கள் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டன. ஆனால், 4.6 லட்ச தடுப்பூசி டோஸ்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.


மார்ச் 1ம் தேதியில் இருந்து, 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், அதன் பிறகு கண்டறியப்பட்ட 20 இணை நோய்கள் உள்ள 45-59 வயது வரையிலானவர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் இரண்டாவது கட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது. 


மே 1-ஆம் தேதி முதல் ‘தாராளமயமாக்கப்பட்ட விலை நிர்ணயம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட தேசிய கொரோனா தடுப்பூசி உத்தி’, என்ற மூன்றாவது கட்ட  திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதன்மூலம், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 


இந்நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட தடுப்பூசி திட்டத்தில், தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் தடுப்பூசி விகிதம் அதிகரித்ததாக தி இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.  உதாரணமாக, கடந்த மார்ச் 31ம் தேதி,மத்திய அரசிடம் இருந்து வாங்கிய தடுப்பூச்சிகளில், 75 சதவிகித தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டன.ஏப்ரல் 1ம் தேதி முதல் (45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ),இந்த எண்ணிக்கை 80%மாக அதிகரித்திருக்கிறது. மே 1ம் தேதியில் இருந்து, மத்திய அரசிடம் இருந்து பெற்ற தடுப்பூசி மற்றும் மாநிலம் நேரடியாக கொள்முதல் செய்த தடுப்பூசிகளில்,கிட்டத்தட்ட 95 சதவிகித டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


இருப்பினும், தமிழ்நாட்டுக்கு தேவையான அளவு   தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை. உதாரணமாக, கடந்த மே மாதத்தில், விநியோகம் செய்யப்பட்ட  தடுப்பூசிகளை விட கூடுதலான தடுப்பூசி டோஸ்களை மாநில அரசு நிர்வகித்ததாக இந்து நாளிதழ தெரிவித்துள்ளது. 2021, மே மாதத்தில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை, முந்தைய மாதத்தை விட 30 சதவிதம் குறைவாக இருந்திருக்கிறது.



ப.சிதம்பரம் கருத்து: தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை!  தடுப்பூசி போடுவது ஜூன் 2ம் தேதியிலிருந்து ஏறத்தாழ மாநிலம் முழுவதும் நிறுத்தப்பட்டு்ள்ளது.  மத்திய அரசின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் கொள்முதல் கொள்கைகள் தாம் இந்நிலைக்கு முழு முதல் காரணம் . ‘தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது’ என்று நாள் தோறும் மார்தட்டிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 


இதையும் படிக்க:  கோவை : தடுப்பூசி கையிருப்பு காலி - இன்று தடுப்பூசி பணிகளில் தொய்வு.. 


44 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஆர்டர் செய்தது மத்திய அரசு !