இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 20,911 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்த பாதிப்பு 28 லட்சத்து 68 ஆயிரத்து 500 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் மொத்த உயிரிழப்பு 36 ஆயிரத்து 930 ஆக அதிகரித்திருந்தது. சென்னையில் மட்டும் அதிகபட்ச பாதிப்பாக நேற்று ஒரே நாளில் 8218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


 


 






இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் 23,459 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 28 லட்சத்து 91 ஆயிரத்து 959 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் மொத்த உயிரிழப்பு 36 ஆயிரத்து 956 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்ச பாதிப்பாக இன்று ஒரே நாளில் 8963 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இன்றைய கொரோனா நிலவரம்: