உலகையே உலுக்கிய கொரோனா தொற்று நோய் பாதிப்புகள் நேற்று தமிழ்நாடு முழுவதும் ஒருவருக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.


கொரோனா தொற்றுநோய்


2019-ஆம் ஆண்டு முதன் முறையாக கண்டறியப்பட்டதால் இந்த நோய்க்கு கோவிட்-19 என்று பெயர் வந்தது. சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட இந்த நோய் தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவி கடுமையான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. முதல் அலை, இரண்டாம், அலை, மூன்றாம் அலை என்று ஒவ்வொரு அலையாக வந்த கொரோனா இயல்பு வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதோடு கொஞ்சம் கொஞ்சமாக வெவ்வேறு பரிமாணம் அடைந்து, புதிய புதிய வேரியன்ட்கள் வந்தன. உலகெங்கும் பல நாடுகள் லாக்டவுன் அறிவித்து மக்களை வீட்டுக்குள் முடக்கியது. ஒர்க் ஃப்ரம் ஹோம் என்று நாம் பெரிதும் அறிந்திராத வேலை செய்யும் முறை பரவலானது.


சூப்பர் நியூஸ் மக்களே.. நேற்றைய தினம் ஒரு புதிய கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஜீரோவானது..


கொரோனாவால் ஏற்பட்ட மாற்றம்


அதன் மூலம் ஓடிடி, ஆன்லைன் ஆர்டர் போன்ற பல கலாச்சாரங்கள் பரிமாண வளர்ச்சி அடைந்தன. இந்த கொரோனா நிலை அப்படியே இருந்து விடுமோ என்ற அச்சம் எல்லோருக்குமே இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக நிலை மாறி பெரும்பாலும் அனைத்து நாடுகளும் அதிலிருந்து வெளியில் வந்துவிட்டன. குறிப்பாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்புகள் எதுவுமே நேற்றைய தினத்தில் பதிவு செய்யப்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்: Pen Monument: கடலில் இல்லையாமே.. கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை வேறு இடத்தில் அமைக்க முதலமைச்சர் விருப்பம்?


தமிழகத்தில் புதிய பாதிப்புகள் இல்லை


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது. சில நேரங்களில் ஒரு தொற்று கூட கண்டறியப்படாத நாட்கள் கூட இருந்துள்ளன. அந்த வகையில் நேற்றும் தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை. அதே நேரத்தில் ஒருவர் கொரோனாவில், இருந்து குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5-ஆக குறைந்துள்ளது. அதேபோல் நேற்று தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பும் எதுவும் ஏற்படவில்லை. மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



ஒட்டுமொத்த கொரோனா பாதிப்புகள்


உலகளவில் இன்றுவரை 69,14,75,240 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரை கொரோனா நோய்க்கு உலகளவில் 68,99,715 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு 66,40,33,695 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை 4,49,94,819 பேர் இன்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 4,44,61,497 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 5,31,914 பேர் உயிரிழந்துள்ளனர்.