கரூரில் இன்று புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு 32 நபர்களும் கரூர் உள்ள காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கரூர் மாவட்டத்தில் இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை 12 ஆக உள்ளது. அதைத் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர்கள் சிகிச்சை பலனின்றி இறப்பு விகிதம் இன்று எதுவுமில்லை. 




கரூர் மாவட்டத்தில் புதிதாக கொரோனா தொற்று பாதித்தவர்கள் மற்றும் வீடுதிரும்பிய எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதம் எண்ணிக்கை நாள்தோறும் சுகாதாரத்துறையில் அறிவிப்புகள் மூலம் வந்து கொண்டு இருக்கிறது. கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 நபர்களுக்கும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இதுவரை மொத்த நபர்களின் எண்ணிக்கை மற்றும் வீடு திரும்ப வரும் எண்ணிக்கை இறப்பு விகிதம் உள்ளிட்ட வரை பின் வரும் பதிவுகளில் காணலாம்:- 


கரூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 22291 நபர்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அதைத்தொடர்ந்து, கொரோனா தொற்று  சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையில் 21669 நபர்கள் உள்ளனர். அதைத் தொடர்ந்து, தற்போது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் 276 நபர்களும் உள்ளனர். அதைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் மொத்த விபரம் 346 நபர்கள் ஆகும். 





கரூர் மாவட்டத்தில் தற்போது ஊரடங்கு தளர்வுகள் தளர்த்தப்பட்டு ஜவுளி நிறுவனங்கள், கொசுவலை உற்பத்தி நிலையங்கள், நிதி நிறுவனங்கள், டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்கள், இறைச்சி கடைகள், சலூன் கடைகள், இருசக்கர பழுதுபார்க்கும் கடைகள், உழவர் சந்தைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் உள்ளிட்ட கடை கரூர் மாவட்டத்தில் திறக்கப்பட்டு தங்களது வியாபாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் தமிழ்நாடு அரசு ஊரடங்கு விதிகள் படி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆன்மீக தலங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் சுவாமி தரிசனம் செய்ய ஆன்மீக பக்தர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர். எனவே மாவட்ட மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 




அதன் தொடர்ச்சியாக தற்போது கரூரில் இருந்து வெளியூர் செல்ல அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால் நீண்ட நாள் ஆன்மீக பயணம் மற்றும் உறவினர் வீட்டிற்கு செல்லாதவர்கள் தற்போது ஆர்வத்துடன் நாள்தோறும் பேருந்து பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் இந்த ஊரடங்கு தளர்வுகளை மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென மாவட்ட நிர்வாகம் நாள்தோறும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் .




தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முக கவசம் அடைவது ,சமூக இடைவெளி கடைப்பிடிப்பது மற்றும் சனிடைசர் மூலம் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் உள்ளிட்ட விதிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டுமென மாவட்ட சுகாதாரத் துறையும், மாவட்ட நிர்வாகமும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர். எனவே, மாவட்ட மக்கள் கொரோனா தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தமிழக அரசு அறிவித்துள்ள விதிகளை பின்பற்றினால் மட்டுமே அது சாத்தியம்.