கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் . மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1493 ஆக உள்ளது. மேலும் 168 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினார். இதுவரை சேலம் மாவட்டத்தில் 86458 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90063 ஆக உயர்வு. மாவட்டத்தில் 2085 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் நான்காம் நாளாக இன்று தடுப்பூசி இருப்பு இல்லாத காரணத்தினால் மக்களுக்கு செலுத்தப்படவில்லை.  இதுவரை சேலம் மாவட்டத்தில் 8,05,845 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி சிரித்துக் கொள்ள மக்கள் தினம்தோறும் அதிக அளவில் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே, சேலம் மாவட்டத்திற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




சேலம் மாவட்டத்தில் நோய்த் தொற்று குறைந்து வருவதால் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா கேர் சென்டர் ஒவ்வொன்றாக மக்கள் வரத்து இல்லாததால் மூடப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் 90 சதவீத படுக்கைகள் காலியாக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி கொரோனா பதிவு: தர்மபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக 73 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று நான்கு பேர் உயிரிழப்பு. மேலும் 98 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் 804 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய்தொற்று அதிகரித்து இன்று ஒரே நாளில் 67 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழப்பு. நோயிலிருந்து குணமடைந்த 89 பேர் வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 744 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.