மதுரை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக நூற்றுகணக்கில் இருந்த நோய் தொற்று பாதிப்பு நூறுக்கும் கீழ் குறைந்தது சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. அதே போல் உயிரிழப்பும் ஒற்றை இலக்க எண்களில் இருக்கிறது. ஆனால் மதுரைக்கு இணையாக தென் மாவட்டத்தில் புதுக்கோட்டையில் உயிரிழப்பு அதிகமாக இருந்தது. சில நேரங்களில் மதுரையை விட அதிகமான உயிரிழப்பும் இருந்தது. தற்போது புதுக்கோட்டையிலும் உயிரிழப்பு குறைந்துள்ளது. அதே போல் சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டதில் கடந்த வாரங்களில் உயிரிழப்பு வெகுவாக குறைந்து, அவ்வப்போது பூஜ்யம் என்ற எண்ணிக்கை வருவதும் ஆறுதலை அளிக்கிறது.




மதுரை மாவட்டத்தில், இன்று மட்டும் 51 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 72852 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 74 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 71111 -ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1138 இருக்கிறது. இந்நிலையில் 603 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் மதுரையை சுற்றியுள்ள விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் விசாரித்தோம்.


 




 


விருதுநகர் மாவட்டத்தில் இன்று மட்டும் 43 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44974-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 37 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 43951 -ஆக அதிகரித்துள்ளது. இன்று இருவர் உயிரிழந்துள்ளார். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 535 -ஆக  இருக்கிறது. இந்நிலையில் 488 நபர்கள் கொரோனா பாதிப்பால் விருதுநகரில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சிவகங்கை மாவட்டத்தில் இன்று மட்டும் 39  நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18104-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 53 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 17438-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 193-ஆக இருக்கிறது. இந்நிலையில் 473  நபர்கள் கொரோனா பாதிப்பால் சிவகங்கையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



 


 


 


 


 



 


ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் 10 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19777 -ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 11 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 19291-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 339 ஆக இருக்கிறது. இந்நிலையில் 147 கொரோனா பாதிப்பால் ராமநாதபுரத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 


புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மட்டும் 50 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27434 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 53 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26597-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 340 இருக்கிறது. இந்நிலையில் 497 கொரோனா பாதிப்பால் புதுக்கோட்டையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 


இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - குறைந்தது உள்ளூர் பக்தர்களின் வருகை ; பொலிவு பெறுமா மீனாட்சியம்மன் கோவில் !