தமிழ்நாட்டில் இன்று புதிதாக 219 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 56 ஆயிரத்து 916-ஆக உள்ளது.
மாவட்டங்கள் நிலவரம்:
அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 129 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 41 பேரும் கொரோனா தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களில் யாரும் கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
உயிரிழப்பு:
தமிழ்நாட்டில் இன்று யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 025 ஆக உள்ளது.
பரிசோதனை:
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 13 ஆயிரத்து 226 பேருக்கு கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை தமிழ்நாட்டில் 6.67கோடிக்கு மேல் கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா 4-வது அலையா?
இந்தியாவில் 4-வது கொரோனா அலை வருவதாக கூறுவது தவறானது என்று ஐசிஎம்ஆர் கூடுதல் தலைமை இயக்குனர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது. குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த மாநிலங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்தறை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் சில மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பதை வைத்து 4-வது கொரோனா அலை வருவதாக கூறுவது தவறானது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இது குறித்த ஐசிஎம்ஆர் கூடுதல் தலைமை இயக்குனர் சமிரன் பாண்டா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், " இந்தியாவில் 4 வது கொரோனா அலை வருவது என்று கூறுவது தவறானது. மாவட்ட அளவில் தரவுகளை ஆய்வு செய்ய வேண்டும். ஒரு சில மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பத்தை வைத்துக்கொண்டு நாடு முழுவதும் தொற்று அதிகரிப்பதாக கூற முடியாது. அனைத்து வகை உருமாறிய தொற்றுகளும் அச்சத்தை ஏற்படுத்துவது அல்ல" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்