நாடு முழுவதும் நேற்று (ஜூன் 24) மாலை 7 மணி நிலவரப்படி 30.72 கோடிக்கும் (30,72,46,600) அதிகமானனோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின்படி, நாடு முழுவதும் 54.07 லட்சம் (54,07,060) தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன
18-44 வயது பிரிவில் 35,44,209 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியையும், 67,627 பயனாளிகள் தங்களது இரண்டாவது டோசையும் இன்று பெற்றனர், 37 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 7,43,45,835 பேர் முதல் டோசையும், 15,70,839 நபர்கள் இரண்டாம் டோசையும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் தொடங்கியதில் இருந்து இது வரை பெற்றுள்ளனர்.
ஆந்திரப் பிரதேசம், அசாம், பிஹார், சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, ஒடிசா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 18-44 வயது பிரிவில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பு மருந்தை இது வரை வழங்கியுள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும் 42,75,722 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 37476 நபர்கள் இரண்டாம் டோசையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர். புதுச்சேரியில் 15,4601 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர்.
முன்னதாக, கடந்த 7-ம் தேதி நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடப்படும். மொத்தம் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும். தனியார் மருத்துவமனைகள் 25 சதவீத தடுப்பூசியை கொள்முதல் செய்து மக்களுக்கு செலுத்தலாம்" என அறிவித்தார். அதன்படி, கடந்த 21ம் தேதி முதல் மத்திய அரசு புதிய தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கியது. அதன்படி 18-44 வயது பிரிவில் அனைவருக்கும் இலவசமாகக் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக மருந்து நிறுவனங்களிடமிருந்து 75% தடுப்பூசிகளை மத்திய அரசே நேரடியாகக் கொள்முதல் செய்கிறது. மீதமுள்ள 25% மருந்துகளை தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்துகொள்ள அரசு அனுமதியளித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ.780 ஆகவும், கோவாக்சின் தடுப்பூசியின் விலை ரூ.1,410 ஆகவும் நிர்ணயித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை 1,145 ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.