சென்னை ஐஐடியில் மொத்தம் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 25 பேருக்கு கொரோனா பாசிட்டின் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது குறித்து தெரிவித்த சுகாதாரத்துறை  செயலர், ''ஐஐடியில் கொரோனா பாதித்த அனைவருக்கும் லேசான அறிகுறிகள் உள்ளன. ஒரு சிலருக்கே காய்ச்சல் உள்ளது. மொத்தமாக 1420 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்றார்.


முன்னதாக, தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாஸ்க் போடாவிட்டால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. 




வட இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா  உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த இரு தினங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை ஐஐடியில் 55 மாணவர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 


இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. அதன் பிறகு படிப்படியாக கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததன் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு சுழற்சி முறையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது பொதுத்தேர்வுகள் நடத்த அட்டவணையும் வெளியிடப்பட இருக்கிறது. 


இந்தநிலையில், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் தலைத்தூக்க தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதிக்குப் பிறகு புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  அதிகமாக பதிவாகி வருகிறது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.


உலகளவில் 50. 84 கோடி பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளடஹு. மொத்தம் 62. 38 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதே வேளையில் 46. 08 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.


Kushboo Hospitalised: கையில் ட்ரிப்ஸ்... மருத்துவமனையில் இருந்து செல்ஃபி.. குஷ்புவுக்கு என்னாச்சு?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண