சினிமா நடிப்பு, திரைப்பட தயாரிப்பு, அரசியல் என தன்னை பிஸியாக வைத்திருப்பவர் குஷ்பு. இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவர் பதிவிடுவது வழக்கம். அந்த வரிசையில், இன்ஸ்டாவில் சமீபத்தில் அவர் பகிர்ந்த ஒரு புகைப்படம் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது. 


கையில் ட்ர்பிஸ் போட்டு கொண்டு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து, “குணமாகி வருகிறேன்” என பதிவிட்டிருந்தார். இதனால், அதிர்ச்சியான ரசிகர்கள் அவரது உடல்நலம் குறித்து கமெண்ட்டுகளில் விசாரித்து வருகின்றனர்.


குஷ்பு பகிர்ந்த இன்ஸ்டா பதிவு:






இந்நிலையில், அவரது உடலுக்கு என்ன பாதிப்பு என்பது பற்றிய தெளிவான விவரங்கள் இல்லை. எனினும், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


13 வயதில் ஹீரோயின் ஆனார் குஷ்பு. குழந்தை நட்சத்திரமாக இருந்த அவரை கதாநாயகி ஆக்கியவர் போனி கபூர். நடிப்பில் குஷ்புவுக்கு நாட்டமில்லை. படிப்பில் தான் அவரின் விருப்பம் இருந்தது. ஆனால், தந்தை நடிக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நிர்பந்தித்தால் நடித்தார். அவர் தான் படங்களை முடிவு செய்துள்ளார். பணத்துக்காக பாலிவுட்டில் பெயர் தெரியாத படங்களில் எல்லாம் நடித்துள்ளார் குஷ்பு. பின்னர் தென்னிந்தியா செல்வோம் என குஷ்புவை அழைத்துக் கொண்டு வந்தார் அவருடைய தந்தை. 1986ல் சென்னைக்கு வந்தார். தெலுங்கு, கன்னடம் என நடித்து சம்பாதித்தார். அதனை தொடர்ந்து உச்சத்தை தொட்ட அவர், சினிமா, அரசியல் என இரு துறைகளிலும் அசத்தி வருகிறார் குஷ்பு.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண