இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்ற சிலருக்கு கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுவதாக தெரிவித்த ஆய்வுக்கு ICMR  மறுப்பு தெரிவித்து கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்நிலையில் என்ன நடந்தது பனராஸ் பல்கலைக்கழகம் தெரிவித்தது என்ன? அதற்கு ICMR தெரிவித்தது என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம். 


பனராஸ் பல்கலைக்கழக ஆய்வு:  


இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்ற 926 நபர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் கடுமையான பக்க விளைவுகள் இருப்பதாக புகாரளித்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் பதிலளித்தவர்களில் ஒரு சதவீதம் பேர் பக்கவாதம் மற்றும் கை மற்றும் கால்களில் உள்ள நரம்புகளில் பலவீனத்தை ஏற்படுத்தும் குய்லின்-பாரே சிண்ட்ரோம் ஏற்படுவதாக புகாரளித்ததாக தெரிவிக்கப்பட்டது. அதில் சிலருக்கு நீண்டகால பக்கவிளைவுகள் இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவித்தது.




ICMR கண்டனம்:


சில தினங்களுக்கு முன்பு பனாரஸ் இந்து பல்கலைக்கழக பேராசிரியர்களின் குழுவானது, கோவாக்சின் தடுப்பூசி குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆய்வானது சர்ச்சையை கிளப்பிய நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கண்டனத்தை தெரிவித்துள்ளது.


இது கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த ஆய்வுக்கு,  ICMR டைரக்டர் ஜெனரல் டாக்டர் ராஜீவ் பாஹ்ல் தெரிவித்துள்ளதாவது,  இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட வழிமுறையானது மோசமான முறையாகும்.  மேலும் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையானது தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளது.






”ஏற்றுக்கொள்ள முடியாது”


ஆய்வில் தெரிவிக்கப்பட்ட முடிவுகளை, COVID-19 தடுப்பூசியுடன் இணைக்கவோ அல்லது காரணமாகக் கூறவோ முடியாது. இந்த ஆராய்ச்சிக்கு எந்தவித நிதி அல்லது தொழில்நுட்ப ஆதரவையும் ICMR வழங்கவில்லை.  ICMR -இடம் எந்தவித முன் அனுமதியோ அல்லது தகவலோ தெரிவிக்கவில்லை.  இந்த ஆராய்ச்ச்சியானது ICMR  ஆல் அங்கீகரிக்கப்பட்டவில்லை, இது பொருத்தமற்றது மட்டுமின்றி ஏற்றுக்கொள்ள முடியாதது. மோசமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ICMRஐ தொடர்புபடுத்தவும் முடியாது என்றும் ICMR தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் ஆய்வு மேற்கொண்ட குழுவினருக்கு ஐசிஎம்ஆர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் ICMR ஆல் ஒப்புகை பெற்றதாக கூறப்படுவதை, உடனடியாக நீக்குமாறும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. 


Also Read: Covaxin Side Effects: கோவாக்சின் தடுப்பூசியால் பக்க விளைவா? பரவும் செய்தி என்ன? பாரத் பயோடக் தெரிவித்தது என்ன?