மத்திய சுகாதார அமைச்சகத்தின் (ஐசிஎம்ஆர்) இணையதளத்தில் நேற்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்ட இந்தியாவின் சமீபத்திய கோவிட் மேலாண்மை வழிகாட்டுதல்களில் வாய்வழி மருந்தாக உட்கொள்ளும் ஆன்டிவைரல்கள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் மற்றும் வைட்டமின்கள் எதுவும் இடம்பெறவில்லை.
IV ட்ரிப்ஸ் மூலம் வழங்கப்படும் ஆன்டிவைரல் ரெம்டிசிவிர், ஆக்சிஜன் ஆதரவில் மிதமான மற்றும் கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு மட்டும் பரிந்துரைக்கப்படுகிறது. முடக்கு வாதம் மருந்து, டோசிலிசுமாப், ஸ்டெராய்டுகள் கொடுத்தும் முன்னேற்றமடையாத நோயாளிகளுக்கு மட்டுமே இந்த செயல்முறையை அணுகுகிறார்கள். ICMR தலைவர் டாக்டர் பல்ராம் பார்கவ் "புதிய வாய்வழி வைரஸ் தடுப்பு மருந்து, மோல்னுபிராவிர், பாதுகாப்பு சிக்கல்களை கொண்டுள்ளது" என்று கூறியதற்கு 10 நாட்கள் கழித்து இந்த வழிகாட்டுதல்கள் வந்துள்ளன. இந்த விஷயத்தில் பல மருத்துவர்களின் கருத்து வேறுபட்டதாக உள்ளது. மகாராஷ்டிரா பணிக்குழுவின் உறுப்பினரான தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஓம் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "மருத்துவ சமூகத்தினரிடையே எடுத்துள்ள இந்த பொதுக் கருத்தான, இந்த மருந்துகளை புறக்கணிப்பது தவறு." என்று கூறியிருக்கிறார்.
பணிக்குழுவின் வழிகாட்டுதல்கள் 50 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு மோல்னுபிராவிர் மருந்தை அனுமதிக்கப்படுகிறது, அதிலும் குறைந்தது இரண்டு கூடுதல் நோய் உள்ளவர்கள் மற்றும் குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியான காய்ச்சல் உள்ளவர்களுக்கு மட்டுமே கொடுக்கலாம் என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
தொற்று நோய் நிபுணர் டாக்டர் அனிதா மேத்யூ பேசுகையில், "மொல்னுபிராவிர் மருந்தை பரிந்துரைக்கும் உரிமை மருத்துவர்களுக்கு இருக்க வேண்டும், ஏனெனில் அதன் மூலம் பயனடையும் நோயாளிகள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது," என்று கூறினார். லேசான நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காய்ச்சல் மற்றும் வலி போன்ற அறிகுறிகளுக்கான சிகிச்சை தேவை என்றும் கார்டிகோஸ்டீராய்டின் (புடசோனைடு) நாசி ஸ்ப்ரே கொடுக்கலாம் என்றும் ICMR வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. CT ஸ்கேன் மற்றும் விலையுயர்ந்த இரத்தப் பரிசோதனைகள் மிதமான மற்றும் கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகின்றன.
கடந்த வாரம், 35 டாக்டர்கள் கொண்ட குழு இந்திய சுகாதார அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் எழுதியது, இது புதிய வைரஸ் எதிர்ப்பு மற்றும் மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தும் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைக் கேட்டு எழுதப்பட்டிருந்தது, அதன்படி 'தேவையற்ற மருந்து, பரிசோதனை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை' நிறுத்தலாம் என்று கூறப்பட்டிருந்தது.
ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் மெடிசினின் மருத்துவரும், கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் ஒருவருமான டாக்டர் சட்சித் பல்சாரி, “புதிய வழிகாட்டுதல்கள் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளைத் தவிர்ப்பதை உறுதியளிக்கிறது. பொது சுகாதார நிலைப்பாட்டில் இருந்து, பிற மருந்துகளும் சேர்க்கப்படவில்லை என்பது மிகவும் நியாயமானது. மருந்துகளை பெருமளவில் விநியோகித்த அரசு நிறுவனங்கள் இப்போது நடைமுறையை கைவிடுவதாக நான் நம்புகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இன்று கொரோனா தொற்றுக்காக சிகிச்சை எடுப்போரின் எண்ணிக்கை, 17 லட்சத்தைக் கடந்துள்ளது.