கொரோனா தொற்று பரவலாக எல்லா இடங்களிலும் குறைந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் நேற்று வரை 6,63,290 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே போல் 4,32,794 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி 9730 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. 


 



மதுரை மாவட்டத்தில், இன்று மட்டும் 160 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70997-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 760 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 68211 -ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 10 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1060 இருக்கிறது. இந்நிலையில் 1726 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் மதுரையை சுற்றியுள்ள விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் விசாரித்தோம்.



விருதுநகர் மாவட்டத்தில் இன்று மட்டும் 134 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43518-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 231 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 41575 -ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 506 இருக்கிறது. இந்நிலையில் 1437 நபர்கள் கொரோனா பாதிப்பால் விருதுநகரில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



சிவகங்கை மாவட்டத்தில் இன்று மட்டும் 79  நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16767-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 94 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 15670-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்பது ஆறுதல். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 185-ஆக இருக்கிறது. இந்நிலையில் 912  நபர்கள் கொரோனா பாதிப்பால் சிவகங்கையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 



இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் 67 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19188 -ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 128 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 18200-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2  நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 320 இருக்கிறது. இந்நிலையில் 668 கொரோனா பாதிப்பால் இராமநாதபுரத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மட்டும் 83 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26020-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 140 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 24810-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 284 இருக்கிறது. இந்நிலையில் 926 கொரோனா பாதிப்பால் புதுக்கோட்டையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 104 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30891-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல 233 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 29451-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 9 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 556 இருக்கிறது. இந்நிலையில் 884 கொரோனா பாதிப்பால் திண்டுக்கல் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 



தேனி மாவட்டத்தில் இன்று மட்டும் 129 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41486 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 215 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 39611-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்புகள் இல்லை என்பது ஆறுதல். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 472 இருக்கிறது. இந்நிலையில் 1403 கொரோனா பாதிப்பால் தேனி சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதை மிஸ்பண்ணாதீங்க பாஸ் - கொட்டும் பருவ மழை: தேனி அணைகளில் நீர் வரத்து அதிகரிப்பு