மதுரை மாவட்டதில் கொரோனா நோய்த்தொற்று வெகுவாக குறைந்துள்ளது. அதே சமயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வும் அதிகளவு ஏற்பட்டுள்ளது. அதனால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே உள்ள இளங்கோ பள்ளியில் வரிசையில் காத்துக்கிடந்து தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர். மதுரை மாவட்டத்தில் கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் நேற்று வரை 6,50,087 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே போல் 4,18,901 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி 19,920 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. 




மதுரை மாவட்டத்தில் இன்று மட்டும் 164 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70842-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 939 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 67451 -ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1050 இருக்கிறது. இந்நிலையில் 2341 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் மதுரையை சுற்றியுள்ள விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் விசாரித்தோம்.




விருதுநகர் மாவட்டத்தில் இன்று மட்டும் 142 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43379-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 513 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 41344 -ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 506 இருக்கிறது. இந்நிலையில் 1529 நபர்கள் கொரோனா பாதிப்பால் விருதுநகரில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





சிவகங்கை மாவட்டத்தில் இன்று மட்டும் 84  நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16688-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 136 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 15576-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்புகள் இல்லை. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 186-ஆக இருக்கிறது. இந்நிலையில் 926  நபர்கள் கொரோனா பாதிப்பால் சிவகங்கையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் 65 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19120-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 230 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 18072-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3  நபர் உயிரிழந்துள்ளனர். இதனால் இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 318 இருக்கிறது. இந்நிலையில் 730 கொரோனா பாதிப்பால் இராமநாதபுரத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மட்டும் 69 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25937-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 259 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 24670-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 282 இருக்கிறது. இந்நிலையில் 985 கொரோனா பாதிப்பால் புதுக்கோட்டையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இத மிஸ் பண்னாதீங்க பாஸ் - Finance Minister PTR | ’அமைச்சரே ஆக்சிஜன் பைப்பை பொருத்தினார்’ - வியக்கும் தொண்டர்கள், வைரலாகும் புகைப்படங்கள்