ஆர்க்டரஸ் என அழைக்கப்படும், XBB.1.16, கொரோனா வேரியன்ட் அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் புதிதாக பரவி வருவதாக உலக சுகாதாரா அமைப்பு கூறியுள்ளது. மேலும் மற்ற ஓமைக்ரான் வகைகளில் இல்லாத வகையில் குழந்தைகளுக்கு அறிகுறிகள் அதிகம் தென்படுவதாக கூறப்படுகிறது. 


புதிய ஆர்க்டரஸ் (Arcturus) வேரியன்ட்


மார்ச் மாத இறுதியில் XBB.1.16 ஐ "கண்காணிப்பில் உள்ள வேரியன்ட்" என்று WHO அறிவித்தது. இது மேலும் பரவக்கூடிய வேரியன்ட் என்று கூறியது. உலக சுகாதார அமைப்பால் XBB.1.16 வேரியன்ட் தீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய வேரியன்ட் என்று WHO இன் கோவிட் தொழில்நுட்பத் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறினார். குழந்தை மருத்துவரும், Indian Academy of Pediatrics Committee-இன்  முன்னாள் தலைவருமான டாக்டர் விபின் வசிஷ்தா இந்த புதிய வேரியன்ட்டின் அறிகுறிகளை கூறுகிறார், "அதிக காய்ச்சல், இருமல் மற்றும் கண் அரிப்பு, கண் சிவத்தல் ஆகியவை அடங்கும்", என்கிறார். 



இது குறித்து விவாதிக்க நாட்கள் வேண்டும்


ஆர்டிஐ இன்டர்நேஷனல் இன் தொற்றுநோயியல் நிபுணரான ரிச்சர்ட் ரெய்திங்கர், ஃபார்ச்சூன்  ஜர்னலுக்கு அளித்த பேட்டியில், வைரஸின் அறிகுறிகளின் தொகுப்பு உண்மையிலேயே மாறியிருக்கிறதா இல்லையா என்பது குறித்து விவாதிப்பதற்கு இன்னும் சில நாட்கள் வேண்டும், என்று கூறினார். கண் எரிச்சல் ஒரு கோவிட் அறிகுறியாக முன்னர் அறிவிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.


தொடர்புடைய செய்திகள்: விஜய்யின் மாஸ்டர் பிளான் என்ன? அம்பேத்கர் சிலைக்கு மாலை.. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை.. பரபரப்பாகும் அரசியல் களம்..!


கண் பாதிப்புகள்தான் அறிகுறிகள்


'Nebraska Medicine’s Truhlsen Eye Institute' ஆராய்ச்சியாளர்கள் கண்ணின் கண்ணீர்ப் படத்தில் வைரஸை அடையாளம் கண்டுள்ளனர், இது வெண்படலத்திற்கு வழிவகுக்கும் என்று குறிப்பிடுகின்றனர். இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுப் படி, கண் எரிச்சல் அறிகுறிகள் பின்வருமாறு: கண்ணில் நீர் வடிதல், சிவத்தல், வீக்கம், வலி அல்லது எரிச்சல், அரிப்பு, வெளியேற்றம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.



இதுவரை வந்த வேரியன்ட்களில் வலுவானது


நியூ யார்க் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் ஆராய்ச்சி மற்றும் இணைப் பேராசிரியரான ராஜ் ராஜநாராயணன், பார்ச்சூன் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், எக்ஸ்பிபி.1.16 மற்றும் அதன் வேரியன்ட்கள் மற்ற கோவிட் வகைகளை விஞ்சும் திறனைக் கொண்டுள்ளன என்று கூறினார். XBB.1.16 என்பது BA.2 இன் இரண்டு துணை வகைகளின் மறு இணைப்பாகும். டோக்கியோ பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ப்ரீபிரிண்ட் ஆய்வில், இந்த வேரியன்ட்டின், துணை வேரியன்ட்களான XBB.1 மற்றும் XBB.1.5 ஐ விட 1.17 முதல் 1.27 மடங்கு மிகவும் அதிகமான பரவும் தன்மையை கொண்டுள்ளது, என்று பரிந்துரைத்தது.


அதனால்தான் இது குறித்து எதிர்காலத்தில் உலகம் முழுவதும் பரவும் என்ற அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. மற்ற கோவிட் வகைகளில் இருந்து ஒப்பிடும்போது ஆண்ட்டிபாடிகளை எதிர்த்தும் பரவும் தன்மை கொண்டிருக்கிறது, அதனால்தான் இந்த வேரியன்ட் மிக வலுவானதாக தெரிகிறது.