நியோகோவ் வகை கொரோனா குறித்து பீதி அடைய வேண்டாம் என்று தமிழ்நாடு மருத்துவத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று பரவல் சென்னையில் இன்று ராதாகிருஷ்ணன் செய்தியாளார்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “நியோகோவ் வகை வவ்வாலில் இருந்து வவ்வாலுக்கு பரவக்கூடியது. நியோகோவ் கொரோனா தொடர்பாக் தேவையற்ற கருத்துக்களைப் பகிர வேண்டாம். தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பாதுகாப்பு என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். இன்று வரை கொரோனாவால் உயிரிழந்த 730 பேரில் 435 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள். கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 5 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். 18 மாவட்டங்களில் குறைந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 10.17 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது ” என்று கூறினார்.
தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. இந்தியா முழுவதும் ஒமிக்ரானால் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், சில தினங்களாக குறைந்து வருகிறது. இதேபோல், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த நிலையில் சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று மட்டும் தமிழ்நாட்டில் 24,418 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 33 லட்சத்து 3 ஆயிரத்து, 702 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் அதிகபட்ச பாதிப்பாக இன்று ஒரே நாளில் 4,508 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்