தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,564 ஆக உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இன்று ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 1691 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 366 பேர் உயிரிழந்து உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இன்று மட்டும் 119 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சிகிச்சை முடிந்து 342 பேர் வீடு திரும்பி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 27 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டு அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போதைய நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக படுக்கைகள் போதுமான அளவில் உள்ளது. மூன்றாவது அலையில் குழந்தைகள் நோய் தொற்றால் பாதிக்கப்படலாம் என்பதால் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தனிப்படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆக்சிஜன் போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக தெரிவித்து உள்ள மாவட்ட நிர்வாகம், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தூத்துக்குடி, நாமக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு 69.22 மெட்ரிக் டன் ஆக்சிஜனும், விருதுநகர் மற்றும் தென்காசி மருத்துவமனைக்கு 84 ஆக்சிஜன் உருளைகளும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது