தமிழக சுகாதாரத் துறையின் சார்பாக நாள்தோறும் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் எண்ணிக்கையும், அதை தொடர்ந்து நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர் எண்ணிக்கையும் நாள்தோறும் வெளியிட்டு வருகின்றனர்.
இன்று கரூர் மாவட்டத்தில், சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலில் இன்று ஒரேநாளில் 127 நபர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக கரூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் எண்ணிக்கை 332 நபர்கள் நோய் தொற்று சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர்களில் சிகிச்சை பலனின்றி 4 நபர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
வரும் ஜூன் 14-ஆம் தேதி முதல் கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் செல்போன் மற்றும் தொலைக்காட்சி கடைகள் காலை 10 மணி முதல் மதியம் 5 மணிவரை செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு ஒயின்ஷாப் மதுக்கடை திறக்க அனுமதி இல்லை என்ற தகவலால் மது பிரியர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளபடி சில கட்டுப்பாடுடன் கூடிய தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு உத்தரவின்போது, வீட்டைவிட்டு வெளியே வரும்போது வருஷம் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் எனவும், அதேபோல் சமூக இடைவெளியை உள்ளிட்ட அரசு விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் நாள்தோறும் செய்திக்குறிப்பில் வேண்டுகோள் விடுத்துவருகிறார்.
கரூர் மாவட்டத்தில் இன்று 25 இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்றது. இந்த காய்ச்சல் முகாம் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை பஞ்சாயத்து மற்றும் ஊராட்சிகளில் கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம் அவர்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கே சென்று நாள்தோறும் நடத்தி வருகின்றனர். அதேபோல், கரூர் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் தொடர்ந்து ஐந்து நாட்களாக செயல்படாத நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்சியால் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்ற நேற்று இரவு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தகவல் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை மாவட்டத்தில் 28 இடங்களில் தடுப்பூசி முகாம் சிறப்பாக நடைபெற்றது. ஒரு சில இடங்களில் தேவை அதிகம் இருந்ததால் சிறு,சிறு சச்சரவுகளும், தடுப்பு முகாமில் ஏற்பட்டது. பின்னர் போலீசார் கேட்டுக்கொண்டதற்கிணங்க பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தொற்று அதிக அளவில் பரவும் மாவட்டத்தில் ஒன்றாக உள்ளது.
கரூரில் காவல்துறையும் நாள்தோறும் முகக்கவசம் அணியாமல் நடமாடும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். குறைந்தது 100-க்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நாள்தோறும் வழக்கு பதிவுசெய்து அதை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆகவே, பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி தங்களது அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வர வேண்டுமெனவும் கரூர் மாவட்ட காவல்துறையின் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.