கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கையில் வயதுவாரியாக பாதிக்கப்பட்டிருப்போர் சதவீதம், கடந்த ஏப்ரல் 14 முதல் மே 8 வரை எவ்வளவு இருந்ததோ, ஆக்டிவ் தொற்றாளர்கள் 18000 - 19000-ஆக அதே எண்ணிக்கையே தொடர்ந்து வருகிறது என்று கொரோனா டேட்டாவை, கோவிட் டேட்டா அலாலிஸ்ட்டான விஜய் ஆனந்த் பதிவிட்டுள்ளார். மேலும் அதிர்ச்சியளிக்கும் விஷயமாக, 0 -19 வயதுவரையிலானவர்களின் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும், இந்த மதிப்பீட்டில், 40 வயது முதல் 69 வயது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் குறைந்துள்ளதாகவும், 20-29 வயதிலானவர்களிடையே குறைந்தும், 30 முதல் 39 வயதுக்கு இடையிலானவர்களிடமும் அதிகரித்தும் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக கொரோனா தொற்றானது குறைந்து வருகிறது. மாநில அளவில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 764 பேருக்கு நேற்று கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 18 ஆயிரத்து 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிக அளவாக இன்றும் கோவை மாவட்டத்திலேயே 2 ஆயிரத்து 439 ஆக தொற்று பதிவாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்து 596 பேரும், சென்னையில் ஆயிரத்து 437 பேரும், தி்ருப்பூர் மாவட்டத்தில் 995 பேரும், சேலத்தில் 975 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 773 பேரும், தஞ்சாவூரில் 770 பேரும் கொரோனா கிருமித் தொற்றுக்கு ஆளாகினர். நாமக்கல் மாவட்டத்தில் 525 பேருக்கும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 490 பேருக்கும், நீலகிரி மாவட்டத்தில் 498 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 487 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 463 பேருக்கும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 446 பேருக்கும் கொரோனா தொற்றியுள்ளது. மாநில அளவில் கொரோனா தொற்றால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தவர்களில் 31ஆயிரத்து 45 பேர் இன்று குணமடைந்தனர். நேற்றைய நிலவரப்படி, கோவையில்தான் அதிக அளவாக 26 ஆயிரத்து 751 பேர் பாதிப்பில் தனிமைப்படுத்தலிலும் மருத்துவமனை சிகிச்சையிலும் இருந்தனர்.
நேற்று, திருப்பூரில் 18 ஆயிரத்து 969 பேரும், சென்னையில் 16 ஆயிரத்து 709 பேரும், ஈரோட்டில் 14 ஆயிரத்து 284 பேரும், சேலத்தில் 10 ஆயிரத்து 558 பேரும், மதுரையில் 9 ஆயிரத்து 671 பேரும், தஞ்சாவூரில் 6 ஆயிரத்து 943 பேரும், திருவண்ணாமலையில் 6 ஆயிரத்து 554 பேரும், கன்னியாகுமரியில் 6 ஆயிரத்து 810 பேரும், நாமக்கல்லில் 6 ஆயிரத்து 437 பேரும்,செங்கல்பட்டில் 5 ஆயிரத்து 987 பேரும் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டு இருந்தனர்.
மாநில அளவில் நேற்றைய நிலவரப்படி 2 லட்சத்து 32 ஆயிரத்து 26 பேர் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தலிலும் மருத்துவமனை சிகிச்சையிலும் உள்ளனர். பாதிக்கப்பட்டு இருந்தவர்களில் 31 ஆயிரத்து 45 பேர் இன்று குணமாகினர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 409 ஆகப் பதிவாகியது. இதுவரை, மாநிலத்தில் கொரோனா தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆயிரத்து 765ஆகப் பதிவானது.