புதிய வகை உருமாறிய கொரோனா தொற்றான பி.1.617 டெல்டா மற்றும் பி.1.351 பீட்டாவுக்கு எதிரான பாதிப்பை கோவாக்சின் தடுப்பு மருந்து தருவாதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் 'bioRxiv' என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளன. கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிம், நடுநிலைப்படுத்தல் திறன் (neutralisation potential) சோதனையை இந்த ஆய்வு மதிப்பீடு செய்தது. புதிய வகை உருமாறிய கொரோனா தொற்றான பி.1.617 டெல்டா மற்றும் பி.1.351 பீட்டாவுக்கு எதிரான நோய்த்தீவிரத் தன்மையின் தாக்கம் (titer for neutralizing antibodies) முறையே 3 மற்றும் 2.7 மடங்கு குறைந்து இருப்பது கண்டறியப்பட்டது.
COVID-19 Vaccine : ‛தயக்கமல்ல தட்டுப்பாடே காரணம்’ தடுப்பூசி குறித்து பிரதீப் கவுர் கருத்து!
இதனோடு ஒப்பிடுகையில், கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் உடலில் உருவான சீரோ ஆன்டிபாடிகள் மூலம், பி.1.617 டெல்டா மற்றும் பி.1.351 பீட்டாவுக்கு எதிரான நோய்த்தீவிரத் தன்மையின் தாக்கம் முறையே 3.3 மற்றும் 4.6 மடங்கு குறைந்ததாக கண்டறியப்பட்டது.
பாரத் பயோடேக் நிறுவனம், தேசிய வைராலஜி நிறுவனம், ஐசிஎம்ஆர் ஆகிய நிறுவனங்கள் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். வெறும் குறைந்த அளவிலான தடுப்பூசி பயனாளிகளிடம் மட்டுமே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது, மேலும், இந்த ஆய்வு தற்போது வரை peer-reviewed செய்யப்படவில்லை. முன்னதாக, கோவேக்சின் தடுப்பூசியைவிட கோவிஷீல்டு தடுப்பூசி சற்று அதிகமாக ஆன்டிபாடிக்களை உருவாக்குவதாகவும், அதேவேளையில் இரண்டு தடுப்பூசிகளுமே சிறந்த முறையில் நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்குவதாகவும் இந்திய மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கை மெட்ரிசிவ் Medrxiv என்ற மருத்துவ இதழலில் கடந்த 2-ஆம் தேதி வெளியானது. இந்த ஆய்வுக்காக, 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 515 மருத்துவ முன்களப்பணியாளர்கள் கண்காணிக்கப்பட்டனர்.
இவர்களில் 425 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியும், 90 பேர் கோவேக்சின் தடுப்பூசியும் போட்டுக்கொண்டிருந்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்களிடம் 98.1% ஸீரோபாஸிட்டிவிட்டி ஏற்பட்டிருந்ததும், கோவேக்சின் செலுத்திக்கொண்டவர்களில் 80.0% ஸீரோபாஸிட்டிவிட்டி ஏற்பட்டிருந்ததும் தெரியவந்தது. அதேபோல், கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்களுக்கு ஆன்டிஸ்பைக் ஆன்டிபாடிக்களும் அதிகளவில் இருப்பது தெரியவந்தது.
கோவேக்சினை விட கோவிஷீல்டு ‛செம்ம’ : ஆய்வில் தகவல்!
தடுப்பூசி: தடுப்பூசி என்பது நோய் எதிர்ப்பு நினைவகத்தை செயற்கையாகத் தூண்டும் ஒரு முறையாகும். மோசமான நோய்க்கிருமியின் ஆன்டிஜென்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், நோயெதிர்ப்பு மண்டலம் ஜோடி ஆன்டிபாடிகள் மற்றும் நோய் எதிர்ப்பு நினைவகத்தை உருவாக்குவதற்குத் தூண்டப்படுகிறது. ஆன்டிபாடிகள் மற்றும் நினைவகத்தை உருவாக்க ஒருவரின் நோயெதிர்ப்பு மண்டலத்தை செயற்கையாகத் தூண்ட பல வழிகள் உள்ளன. இப்படித் தான் புதிய கொரோனா வைரஸின் ஆன்டிஜென்களை மனித நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு முன்வைக்கப்படுகிறது. அடினோவைரஸ் அடிப்படையிலான லைவ்-அட்டென்யூட்டட் வைரஸ் முதல் மறுசீரமைப்பு மரபணுத் தொழில்நுட்பம் வரை பல வகையான தடுப்பூசிகளை உருவாக்கப் பயன்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு சாத்தியக்கூறுகளில் இரண்டு, வைரஸை செயலற்றதாக்கும் தடுப்பூசி ( Inactivate Vaccine- கோவாக்சின்) மற்றும் DNA பிளாஸ்மிட் தடுப்பூசி (கோவிஷீல்டு) ஆகும்.