விழுப்புரம் மாவட்டத்தில்‌ நேற்றைய கொரோனா தொற்று எண்ணிக்கை தெரியுமா?

விழுப்புரம் மாவட்டத்தில்‌ பூஜ்ஜியமானது ஒருநாள் கொரோனா தொற்று எண்ணிக்கை...

Continues below advertisement

விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ இதுவரை 56580 பேர்‌ கொரோனா தொற்றால்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌. இவர்களில்‌ 56201 போ்‌ குணமடைந்தனர்‌. 367 போ்‌ உயிரிழந்தனர்‌. இந்த நிலையில் இன்று (12-04-2023) யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை . இந்த புள்ளி விவரங்கள்‌ விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ உள்ள மருத்துவமனைகள்‌ ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ போன்ற இடங்களில்‌ நேரடியாக கொடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள்‌ அடிப்படையில்‌ வெளியானவையாகும்‌. வெளி மாவட்டங்களில்‌ பரிசோதனை செய்து பாதிப்பு உறுதி செய்யப்பட்ட விழுப்புரம் ‌மாவட்டத்தைச்‌ சேர்ந்தவர்களின்‌ எண்ணிக்கை இந்த புள்ளி விவரத்தில்‌ சேர்க்கப்படவில்லை என சுகாதாரத்‌துறையினர்‌ தெரிவித்தனர்‌. 

Continues below advertisement

கடந்த காலங்களில் சராசரியாக 400 முதல் 500 பேர் வரை பாதிக்கப்பட்டு வந்தனர்.  நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையும் அதிகரித்தது. சற்று கொரோன தொற்று ஓய்ந்த நிலையில் மீண்டும் தொடங்கியுள்ளது. விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் விக்கிரவாண்டி, வானுார், செஞ்சி, திண்டிவனம் ஆகிய அரசு மருத்துவமனைகள் மற்றும் விழுப்புரம், திண்டிவனத்தில் தலா ஒரு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றது. விழுப்புரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மொத்தம் 186 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மொத்தம் 831 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், 181 ஆக்சிஜன் படுக்கைகள். இதில், 81 அவசர சிகிச்சை படுக்கைகள் உள்ளன. அவசர சிகிச்சை படுக்கைகளுக்கு மாற்றப்படும் நோயாளிகளுக்கு சிலிண்டர்கள் மூலம் ஆக்சிஜன் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் 24,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு ஆக்சிஜன் டேங்கர் உள்ளது. 

தற்போது கொரோனா பரவல் மீண்டும் சற்று அதிகரித்து வருவதால் விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் பொதுமக்கள் கவனமாகவும், வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement
Sponsored Links by Taboola