புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த மாதம் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது இரட்டை இலக்கத்தை தாண்டியுள்ளது. இருப்பினும் ஒருசிலர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மற்றவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 104 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 76 ஆயிரத்து 654 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



தற்போது மருத்துவ மனைகளில் 17 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 399 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 416 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 50 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 74 ஆயிரத்து 260 (98.64 சதவீதம்) ஆக உள்ளது.  கொரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது. குணமடைந்தோர் சதவீதம் 98.64. பொது மக்கள் அனைவரும் முகக்கவசம் சரியாக அணிந்து, தனிநபர் இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடித்து, கை சுத்தம் பேணி, கொரோனா தடுப்பூசியும் போட்டுக்கொண்டால் கொரோனாவில் இருந்து முற்றிலும் விடுபடலாம்” என்று சுகாதாரத் துறை சார்பில் குறிப்பிட்டுள்ள. 




புதுச்சேரியில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஒற்றை இலக்க எண்களில் பதிவாகி வந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது. அரசு சார்பில் நடவடிக்கைகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக நடவடிக்கை மூலமாக நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்கள் முழு மூச்சுடன் தற்காப்பை மேற்கொள்வதையும், முகக்கவசம் அணிவதையும், சானிடைசர் பயன்படுத்துவதையும், சமூக விலகலையும் கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண