விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 42911 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 42029 போ் குணமடைந்தனர். 333 போ் உயிரிழந்தனர். இந்த தினசரி பாதிப்பு பொதுமுடக்கம் காரணமாக படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இந்தநிலையில் இன்று 64 நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. உயிரிழப்பு இல்லை. இதே நிலை நீடித்தால், விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் மேலும் குறைந்து, பாதிப்பு வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது. இந்த புள்ளி விவரங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற இடங்களில் நேரடியாக கொடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் வெளியானவையாகும். வெளி மாவட்டங்களில் பரிசோதனை செய்து பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை இந்த புள்ளிவிவரத்தில் சேர்க்கப்படவில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
விழுப்புரம்: 64 பேருக்கு கொரோனா தொற்று; உயிரிழப்பு இல்லை !
சிவரஞ்சித் | 07 Jul 2021 08:42 PM (IST)
விழுப்புரம் மாவட்டத்தில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா தொற்றில் இன்று 64 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம்