தமிழக -கேரள எல்லையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது, கடந்த ஒரு சில நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏதும் இல்லாத நிலையில், நேற்றும் இன்றும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவும் முதல் அலையிலிருந்து ஒப்பிடும்போது இரண்டாம் அலையில் தேனி மாவட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஊரடங்கு விதிகள் கடுமையாக பின்பற்றப்பட்டது,
வீட்டுத்தனிமை மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 2107 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மேலும் 12 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம் மற்றும் மாதங்களில் ஒப்பிடும்பொழுது தேனி மாவட்டத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு என்பது இறங்கு முகமாகவே உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். இருப்பினும் வைரஸ் தொற்றால் உயிரிழப்புகள் அதிகரித்துவருவது பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் இன்று 8 ஆயிரம் தடுப்பூசிகள் வந்த நிலையில் 3800 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.