மதுரை மாவட்டத்தில், இன்று மட்டும் 33 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74687-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 13 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 73221 -ஆக அதிகரித்துள்ளது. இன்று இருவர் உயிரிழந்தனர். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1164 இருக்கிறது. இந்நிலையில் 302 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மதுரையை சுற்றியுள்ள தேனி, திண்டுக்கல், விருதுநகர், ஆகிய இடங்களில் விசாரித்தோம்.




விருதுநகர் மாவட்டத்தில் இன்று மட்டும் 16 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46088-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 10 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 45386-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 547-ஆக  இருக்கிறது. இந்நிலையில் 155 நபர்கள் கொரோனா பாதிப்பால் விருதுநகரில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 11 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32838-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 8 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 32072ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது ஆறுதல்.  இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 638 இருக்கிறது. இந்நிலையில் 128 கொரோனா பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




தேனி மாவட்டத்தில் இன்று மட்டும் 8 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 434443-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 4 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 42839ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 517 இருக்கிறது. இந்நிலையில் 87 கொரோனா பாதிப்பால் தேனியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,


பழனி: பக்தர்களிடம் கட்டாய வசூலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - திருநங்கைகளுக்கு போலீஸ் எச்சரிக்கை