தமிழ்நாட்டில் இன்று 1531 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
1,50,410 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,531 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 184 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 23 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35650 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சைப் பெற்று டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 1582 பேர். இதுவரை 2668495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்