சேலத்தில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழப்பு. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1480 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 412 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினார். இதுவரை சேலம் மாவட்டத்தில் 85913 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பை எண்ணிக்கை 88883 ஆக உயர்வு. மூன்றாம் நாட்களுக்கு பிறகு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 138 மையங்களில் 55380 தடுப்பூசிகள் இன்று செலுத்தப்பட்டது. இதுவரை சேலம் மாவட்டத்தில் 8,05,845 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக 92 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று உயிரிழப்பு ஏதுமில்லை. மேலும் 82 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய்தொற்று அதிகரித்து இன்று ஒரே நாளில் 89 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழப்பு. நோயிலிருந்து குணமடைந்த 158 பேர் வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 923 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.