தமிழ்நாட்டில் மேற்கு மாவட்டங்களில் தொடர்ந்து அதிக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் கோவை தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. அதேசமயம் கோவையில் மே மாதத்தில் ஏறுமுகத்தில் இருந்த கொரோனா தொற்று பாதிப்புகள், ஜீன் மாதத்தில் இறங்கு முகத்தில் உள்ளது. கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
கோவையில் இன்று 756 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 15 ஆயிரத்து 808 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 7248 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 1151 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 6 ஆயிரத்து 592 பேராக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா தொற்றால் இன்று 12 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1968 ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு, திருப்பூர், நீலகிரி நிலவரம்
தினசரி கொரொனா பாதிப்பில் ஈரோடு தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இன்று 641 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்தார். 994 பேர் குணமடைந்துள்ள நிலையில், 4965 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்புகள் 86 ஆயிரத்து 514 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 80984 பேர் குணமடைந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் 565 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 386 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளனர். 538 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2247 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்புகள் 80426 ஆகவும், குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 77456 ஆகவும், மொத்த உயிரிழப்பு 723 ஆகவும் உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று 138 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று 13 பேருக்கு கூடுதலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 345 பேர் குணமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்தார். 967 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்புகள் 27726 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26804 ஆகவும், உயிரிழப்புகள் 155 ஆகவும் உள்ளது.
சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர் நிலவரம்
சேலம் மாவட்டத்தில் இன்று 419 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநில அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. 710 பேர் குணமடைந்துள்ள நிலையில், 3127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 8 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்புகள் 85725 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 81175 ஆகவும், உயிரிழப்புகள் 1423 ஆகவும் உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று 107 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினத்தை விட 5 பேருக்கு கூடுதலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 185 பேர் குணமடைந்துள்ள நிலையில், 874 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்புகள் 23854 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 22783 ஆகவும், உயிரிழப்புகள் 197 ஆகவும் உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 257 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 289 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2193 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்புகள் 43511 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 40919 ஆகவும், உயிரிழப்புகள் 399 ஆகவும் உள்ளது.
கரூர் மாவட்டத்தில் இன்று 80 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 76 பேர் குணமடைந்துள்ள நிலையில், 802 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்தனர். மொத்த பாதிப்புகள் 21751 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 20613 ஆகவும், உயிரிழப்புகள் 336 ஆகவும் உள்ளது.
கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், நீலகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று தொற்று பாதிப்புகள் சற்று அதிகரித்துள்ளது.