COVID-19 தொற்றுநோயின் தாக்கம் குறித்து சீனா மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று சீனாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார், அமெரிக்க எரிசக்தி துறை இந்த தொற்றுநோய் சீன ஆய்வக கசிவால் ஏற்பட்டது என அறிவித்த பின் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.  


யு.எஸ். சேம்பர் ஆஃப் காமர்ஸ் நிகழ்வில் வீடியோ இணைப்பு மூலம் பேசிய நிக்கோலஸ் பர்ன்ஸ், ஐ.நா. சுகாதார நிறுவனம் பலப்படுத்தப்பட வேண்டுமானால், உலக சுகாதார அமைப்பில் (WHO) இன்னும் தீவிரமான பங்கை சீனா எடுக்க வேண்டும் என்றார்.  "COVID-19 பற்றி வுஹானில் மூன்று ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது என்பது குறித்து சீனா இன்னும் நேர்மையாக இருக்க வேண்டும்" என்று பர்ன்ஸ் கூறினார். டிசம்பர் 2019 இல் கொரோனா தொற்று முதலில் சீனாவில் பரவியதை சுட்டிக்காட்டினார்.  


சீன ஆய்வகக் கசிவிலிருந்து தான் கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க எரிசக்தி துறை கூறியுள்ளது. ஆனால் இந்த கூற்றை பெய்ஜிங் தரப்பில் மறுக்கபட்டுள்ளது. ஜனாதிபதி ஜோ பிடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தொற்றுநோயின் தோற்றம் குறித்து உளவுத்துறை வட்டாரத்தில் பலவிதமான கூற்றுகள் இருப்பதாகவும் அவர்களில் பலர் தங்களிடம் போதுமான தகவல்கள் இல்லை என்றும் கூறியுள்ளனர் என தெரிவித்தார்.     


சீனாவில் கடந்த ஆண்டு கொரோனாவின் தொற்று உச்சத்தில் இருந்தது. சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் தரவுகளின்படி டிசம்பர் மாதம் முதல் 20 நாட்களில் 248 மில்லியன் மக்கள் அல்லது கிட்டத்தட்ட 18% மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பெய்ஜிங்கின் ஜீரோ கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தியதியதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் மக்களிடையே தொற்று பரவல் அதிகரித்துள்ளது.


ஷென்சென், ஷாங்காய் மற்றும் சோங்கிங் நகரங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் தொற்று பரவல் அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.  கொரோனா தொற்று முதலில் பெய்ஜிங் நகரத்தில் பரவத்தொடங்கியது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மை குறைந்திருந்தால் கூட கொரோனா பரவும் விகிதம் அதிகமாக இருந்தது. 


INSACOG தரவுகளின்படி, அமெரிக்காவில் கொரோனா தொற்றின் பரவுதலுக்கு காரணமான COVID-19 இன் XBB 1.5 ஸ்ட்ரெய்னின் ஒரு புதிய தொற்று இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவில், XBB மற்றும் XBB.1.5 மாறுபாடால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை மொத்த பாதிப்பில் 44% ஆக பதிவாகியுள்ளது. INSACOG தரவின்படி BF.7 மாறுபாட்டால் 9 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த உருமாறிய கொரோனா வைரஸ் சீனாவில் கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம் என்படு குறிப்பிடத்தக்கது.  ஓமிக்ரான் துணை-மாறுபாடு  BF.7னால் மேற்கு வங்கத்தில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குஜராத் மற்றும் ஹரியானாவில் தலா இரண்டு பேரும், ஒடிசாவில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 


சுகாதாரத்துரையின் கூற்றுப்படி, நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் 0.01% ஆகவும்,  சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் 98.80% ஆக அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் மூளையை தாக்கும் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வரும் நிலையில் PIB தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் புதிய வகை கொரோனா வைரஸ் மூளையை தாக்கும் என்று சமூக வலைத்தளங்களில் வரும் செய்தி போலியானது. இது போன்ற எந்த ஆய்வுகளும் இல்லை. இதை யாரும் நம்ப வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.