இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் ஒரு கோடி பேருக்கான கொரோனா தடுப்பூசி என்கிற இலக்கை எட்டியது மத்திய அரசு. பிரதமர் இதுகுறித்த வாழ்த்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதற்கிடையே தடுப்பூசி போடுவதை எளிமையாக்கவும் மேலும் துரிதப்படுத்தவும் சில எளிய முறைகளை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது அரசு. இதன்படி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான முன்பதிவை நேரடியாக கூகுள் தளத்திலேயே புக் செய்துகொள்ளலாம். இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்வீட் செய்துள்ளார்.
கூகுளில் உங்களுக்கான கொரோனா தடுப்பூசியை புக் செய்வது எப்படி?
1. கூகுள் வலைதளத்துக்குச் செல்லவும்
2. அதில் 'Covid vaccine near me' என டைப் செய்யவும். உங்களுடைய மேப்பிங் லொகேஷனைப் பொறுத்து உங்களுக்கு அருகில் இருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மருத்துவமனைகளை அது காண்பிக்கும்
3. உங்களுக்குச் சரியான மருத்துவமனையை அதில் க்ளிக் செய்யவும்.
4. மருத்துவமனைக்கான கூகுள் பக்கம் கீழே(5ல்)காட்டியுள்ளபடி தோன்றும்.
5. அதில் சென்று 'Book appointment' என்கிற பட்டனை க்ளிக் செய்யவும்
6.அது உங்களை COWIN பக்கத்துக்கு அழைத்துச் செல்லும்.அங்கே உங்களது மொபைல் எண்ணை பதிவு செய்து தடுப்பூசிக்கான முன்பதிவை மேற்கொள்ளலாம்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதற்காக செலுத்திக் கொண்டவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் ’இது கொண்டாடப்பட வேண்டிய தருணம் என வாழ்த்து தெரிவித்திருந்தார். நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 1.33 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.