கொடிய வைரஸான கொரோனா தொற்றுக்கு மகனை இழந்த நடிகை, தற்போது கணவரையும் இழந்துள்ளது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டுக்கார அலமேலு, நாடோடித் தென்றல், அமராவதி, பாண்டர் பூமி என ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கவிதா. தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் அவர், கொரோனா அச்சத்தால், கடந்தாண்டு முதல் படப்பிடிப்புகளில் கலந்துகொள்வதை நிறுத்திக் கொண்டார். தெலுங்கானா மாநிலம் ஹைதாராபாத்தில் வசித்து வரும் இவரின், கணவர் தசரத ராஜ், மகன் சாய் ரூப் ஆகியோருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையி சிகிச்சை பெற்று வந்தார்கள். இந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு மகன் சாய் ரூப் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், நடிகை கவிதா சோகத்துடன் இருந்து வந்தார். அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள், மற்றொரு அதிர்ச்சியாக அவரின் கணவர் தசரத ராஜும் உயிரிழந்தார். இரண்டு வார இடைவெளியில் கணவர், மகனை கொரோனாவுக்கு பலி கொடுத்துள்ளார். இதுபோல் யாருக்கும் நிகழக்கூடாது என்று நடிகை கவிதாவுக்கு திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.
நாட்டில் கொரோனா இரண்டாவது அலையால் பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு, உயிரிழப்புகள் அதிகரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா தொற்று பாதிப்பு திரையுலகை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. கொரோனாவால் திரைப்பிரலங்கள் பலர் பாதிக்கப்படுவதும், அதில் சிலர் உயிரிழந்து வருவதும் அதிகரித்தது.
கடந்த சில மாதங்களில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், நடிகர் விவேக், இயக்குநர் தாமிரா, இயக்குநர் கே.வி.ஆனந்த், மூத்த நடிகர் செல்லதுரை, நடிகர் டி.கே.எஸ் நடராஜன், நடிகர் பாண்டு, பாடகர் கோமகன், ஜோக்கர் துளசி, நெல்லை சிவா, நடிகர் மாறன், நடிகர் பவுன்ராஜ், நடிகர் ஐய்யப்பன் கோபி, சீரியல் நடிகர் குட்டி ரமேஷ் ஆகியோரை திரையுலகம் இழந்துள்ள நிலையில், நடிகர் நிதிஷ் வீராவின் மரணம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், சிலர் மாரடைப்பு உள்ளிட்ட சில காரணங்களால் உயிரிழந்திருந்தாலும், பலர் கொரோனா தொற்றுக்கு பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநரும், நடிகருமான அருண்ராஜா காமராஜாவின் மனைவியும் கொரோனாவுக்கு பலியானார்.
Fake Currency ரூ2000 நோட்டு கலர்ஜெராக்ஸ்.. ஆட்டை ஆட்டையப்போட்ட கும்பல்..