Fake Currency ரூ2000 நோட்டு கலர்ஜெராக்ஸ்.. ஆட்டை ஆட்டையப்போட்ட கும்பல்..

Continues below advertisement

திருவள்ளூர் அடுத்த ஆற்காடு குப்பத்தில் 2 ஆயிரம் ரூபாய் கலர் ஜெராக்ஸ் எடுத்து ரூ.64 ஆயிரம் கொடுத்து ஏமாற்றி ஆடு மேய்ப்பவரிடம் நூதன மோசடி. செய்த சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் ஆந்திர மாநில காவல் துறையிடம் வசமாக சிக்கினர். ஆட்டோவை பறிமுதல் செய்து கத்தை கத்தையாக கலர் ஜெராக்ஸ் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆற்காடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி ஆடு மேய்ப்பவர். அவருக்கு சொந்தமான 30 ஆடுகளை கடந்த ஜூன் 22ஆம் தேதி அவரது கிராமத்தில் வயல்வெளியில் வைத்து மேய்த்துக் கொண்டிருந்தார் ஆடுகள் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முனுசாமியை ஒரு பெண் உள்ளிட்ட மூன்று பேர் ஆட்டோ ஒன்றில் வந்து பக்ரீத் பண்டிகைக்காக செம்மறி ஆடுகள் தேவைப்படுவதாக கூறி 2000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து வாங்கினர். அவர்களது பேச்சை. நம்பி ஆடு மேய்ப்பவர் அவரிடம் இருந்த செம்மறி ஆடுகள் காட்டி 4ஆடுகளை ரூ. 64 ஆயிரம் ரூபாய்க்கு பேரம் பேசியுள்ளனர். அதற்கான தொகை 2000 ரூபாய் தாள்கள் 32 என மொத்தம் 64 ஆயிரம் வழங்கி செம்மறி ஆடுகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டனர். சிறிது நேரத்தில் ஆடு மேய்ப்பவர் பணத்தை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு சென்று வழங்கியபோது இந்தப் பணம் அனைத்தும் கலர் ஜெராக்ஸ் ரூபாய் தாள்கள் என்று தெரிந்து. அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இது தொடர்பாக கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த நிலையில் தற்போது ஆந்திர மாநிலம் கே.வி.பி புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இதே போன்ற மோசடியில் ஈடுப்டடுள்ளனர். ஆடுகளை வாங்க கலர் ஜெராக்ஸ் 2000 ரூபாய் பணத்தை கத்தையாக எடுத்து அதிலிருந்து கொடுத்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த அவர்கள் உடனடியாக அருகில் உள்ள கடைகளில் சென்று சரி பார்த்தனர். ஆனால் அனைத்தும் கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் இவர்கள் மூன்று பேரையும் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து சித்தூர் மாவட்ட எஸ்பி., செந்தில்குமாருக்கு கிடைத்த தகவலயைடுத்து விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் தமிழகத்தில் உள்ள கனகம்மாசத்திரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இவர்கள் கைவரிசையை காட்டியது தெரியவந்தது இவர்கள் ஆயுஷ் என்ற பெண் மற்றும் அப்துல்ஷெரிப், மற்றும் பர்க்கத்துல்லா என்பதும் இவர்கள் மூவரும் சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த ஆந்திர போலீசார் மோசடிக்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்து ஆந்திர மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram