சீனாவில் கடந்த 2019 ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா பெருந்தொற்று, உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை காவு வாங்கியது. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளின் நிலைமையை சரிசெய்ய பல உலகநாடுகள் இன்னும் திணறி வருகின்றனர். 

இந்தநிலையில், தென் ஆப்பிரிக்கா நாட்டில் தற்போது புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனா தொற்றானது பழைய தொற்றை விட 10 மடங்கு வீரியத்துடன் பரவி வருவதாகவும், இதற்கு பி.1.1.529 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒமிக்ரான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 

முன்பு இருந்த கொரோனா தொற்றைவிட தற்போது காணப்பட்டுள்ள தொற்றில் அதிகளவு மாறுதல் காணப்பட்டுள்ளது. இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் இந்த தொற்றினால் பாதிப்பு ஏற்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த புதியவகை கொரோனா தொற்று குறித்து உலக சுகாதார மையம் தெரிவிக்கையில், வைரசின் இந்த புதிய மாறுபாடு கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் உள்ள உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை தருகின்றது என்றும், புதிய வகை மாறுபாடு ஒரு கவலையான நிலை என்றும் தெரிவித்துள்ளது. 

 ஒமிக்ரான் வகை தொற்று தென் ஆப்பிரிக்கா மற்றும் அதனை சுற்றியுள்ள 10 அண்டை நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. தொற்று கண்டறியப்பட்ட தென் ஆப்பிரிக்காவில் இதுவரை 6 பேருக்கும், போட்ஸ்வானாவில் 3 பேர், ஹாங்காங் மற்றும் இஸ்ரேலில் தலா ஒருவருக்கும் இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

 தென் ஆப்பிரிக்காவில் இருந்து வருபவர்களுக்கு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு செல்ல அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. 

இந்தநிலையில், உலகம் முழுவதும் பரவும் ஒமிக்ரான் தொற்று குறித்து பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், சுகாதாரத்துறை அலுவலர்கள், அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா, பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா, சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூ‌ஷன், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கலந்துகொண்டுள்ளனர். 

அவரச ஆலோசனை கூட்டத்தில், விமான சேவை ரத்து செய்வது குறித்தும், போதுமான மருத்துவ உபகரணங்கள் சேமித்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும், தடுப்பூசி விநியோகம் குறித்து பேசப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

 

 

 

 

 

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

 

 

 

 

 

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

 

 

 

 

 

 

யூடியூபில் வீடியோக்களை காண