தமிழ்நாட்டில் மேலும் 532 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழப்புகள் பதிவாகி வந்த நிலையில். நேற்றைய தினம் கொரோனா காரணமாக எந்த உயிரிழப்புகளும் இல்லை என சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேற்றைய தினம் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று சற்று குறைவாக பதிவாகியுள்ளது. புதன்கிழமை 542 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் 532 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 469 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதனால் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,626 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இலங்கை, ஓமன், குவைத் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த 3 வெளிநாட்டு பயணிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சாலை மார்கமாக பிகார் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 6,423 ஆர்டிபிசிஆர் பரிசொதனை மேற்கொள்ளப்பட்டது அதில் 532 மாதிரிகளில் தொற்று கண்டறியப்பட்டது.


தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 113 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த இரண்டு நாட்களை ஒப்பிடும் போது சென்னையில் கொரோனா தொற்று குறைவாக பதிவாகி உள்ளது. செங்கல்பட்டில் 192 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 919 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தொற்று பாதிப்பு 1000 ஐ நெருங்குகிறது. தமிழ்நாட்டில் தொற்று பரவும் சதவீதம் மெதுவாக உயர்ந்து வருகிறது. மார்ச் மாதம் தொற்று சதவீதம் 10% கீழ் இருந்த நிலையில், கோவை – 12 %, செங்கல்பட்டு – 12%, திருவள்ளூர் – 12%, திருப்பூர் – 12%, கன்னியாகுமரி – 11.9%, ராணிபேட் – 11%, சேலம் – 10.9%, சென்னை – 9.2%  ஆக பதிவாகியுள்ளது. கொரோனாவின் Xbb 1.16 மற்றும் ba2 என்ற புதிய வைரஸ் மாறுபாடு தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.


கொரோனா தொற்று பரவல் குறைவாக இருந்தாலும் சமூக பரவலாக மாறாமல் இருக்க மக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதார துறை தரப்பில் அறிவிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்து பதிவானது. கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு இது அதிகமாகும். மேலும் தொற்று பரவல் காரணமாக ஹரியானா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் முகக்கவசம் மக்கள் கட்டாயம் அணீய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.