கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக பயன்பாட்டுக்கு வந்துள்ள முதல் டி என் ஏ தொழில்நுட்பம் மூலம் செயல்படும் தடுப்பூசி இது.
தொழில்நுட்பம்
ப்ளாஸ்மிட் டிஎன்ஏ எனும் மரபணுக்கூறை ஒருவரின் உடலில் செலுத்திய பின் அந்த டிஎன்ஏவானது உடலுக்குள் சென்று கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தை உற்பத்தி செய்யுமாறு உடலின் செல்களைக் கட்டளை இடும். அந்த ஸ்பைக் புரதத்திற்கு எதிரான எதிர்ப்பு சக்தி ஆண்ட்டிபாடிகளை உடல் உற்பத்தி செய்யும் எத்தனை முறை இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்?
இந்த தடுப்பூசியை மூன்று முறை போட்டுக்கொள்ள வேண்டும். ஏனைய தடுப்பூசிகள் இரண்டு தவணை போட்டுக்கொள்ளுமாறு இருக்கின்றன. எனினும் இந்த தடுப்பூசி ஊசி அற்ற முறையில் செலுத்தும் புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசி இந்தியாவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு 28000 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர். ஆய்வின் பிரத்யேகத்தன்மை யாதெனில்
12 முதல் 18 வயதுக்குட்பட்ட 1000 பேர் இந்த ஆய்வில் பங்குபெற்றுள்ளனர் என்பது தான்.
இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வின் முடிவுகள் இன்னும் மருத்துவ இதழ்களில் வெளியிடப்படவில்லை. ஆயினும் இதை தயாரித்துள்ள நிறுவனம் இந்த தடுப்பூசி 66.7% செயல்திறனுடன் அறிகுறிகளுடைய கொரோனா தொற்றை தடுக்கும் என்று கூறியுள்ளது. தீவிர தொற்றுக்கு எதிராக 100% செயல்படும் என்று தெரிகிறது . மேலும் இந்த தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வழங்க முடியும் என்பதும் முக்கியமானது. இந்த தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி செல்சியஸில் பராமரிக்க முடியும் ப்ளாஸ்மிட் டிஎன்ஏ தொழில்நுட்பத்தில் எளிதாக அதிகமான அளவில் தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியும். மேலும் வைரஸ் புதிய உருமாற்றங்களை அடையும்போது அதற்குண்டான மாற்றங்களுடன் எளிதாக உருவாக்கிக்கொள்ள முடியும்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
மேலும் மருந்து உற்பத்தி நிறுவனம் கூறியுள்ளதாவது இந்த தடுப்பூசி புதிய வேரியண்ட்களான டெல்ட்டாவுக்கு எதிராகவும் செயல்படும் என்கிறது ஆண்டுக்கு 10 முதல் 12 கோடி தடுப்பூசி டோஸ்களை உற்பத்தி செய்ய முடியும் என்று சைனஸ்நிறுவனம் உறுதி பூண்டுள்ளது. இந்த சைடஸ் கோவிடி தடுப்பூசிக்கு இந்திய சுகாதாரத்துறை அவசர கால உபயோகத்திற்கான முன் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சைடஸ் கோவிடி தடுப்பூசிக்கு இந்திய சுகாதாரத்துறை அவசர கால உபயோகத்திற்கான முன் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது
டாக்டர்.A.B. ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !