தைவானின் சங்ஹுவா நகரைச் சேர்ந்த 91 வயது மூதாட்டிக்கு கையில் கொம்பு வளர்ந்துள்ளது. இது மருத்துவ உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கொம்பு 7 சென்டிமீட்டர் நீளமும், 4 சென்டிமீட்டர் அகலமும் அந்த மூதாட்டிக்கு வளர்ந்திருக்கிறது.
அந்தக் கொம்பு, தோலில் இருந்து கடினமான கூம்பு வடிவமாக காணப்பட்டுள்ளது. கெரட்டினால் உருவாகியுள்ளது.
கையில் கொம்பு :
நோயாளிக்கு பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளின் எதுவும் இல்லை என்றும், எந்த மருந்தையும் உட்கொள்ளவில்லை என்றும் மருத்துவக் குழு குறிப்பிட்டுள்ளது.
இதுபோன்ற கொம்புகளுடன் கூடிய மனிதர்களை ஃபேன்டசி கதைகளில் தான் படித்திருப்போம். ஆனால், நிஜத்திலேயே இதுபோன்ற ஒருவர் இருப்பது அனைவருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிறப்புறுப்பில் கொம்பு :
முன்னதாக, சீனாவைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபருக்கு பிறப்புறுப்பில் இரண்டு இன்ச் நீளத்திற்கு கொம்பு வளர்ந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது மஞ்சள் கலந்து பிரவுன் நிறத்தில் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அந்தப் பகுதியை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் நீக்கினர். புற்று நோயாக இருந்த அந்தக் கொம்பை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அந்த நோயாளி முழுமையாக குணமடைந்துவிட்டார்.
மேலும் படிக்க : Thengai Poo Benefits : கொடிய நோய்க்கும் மருந்து.. தேங்காய் பூவின் சிறப்புகள்..!