Headache: கழுத்தில் தொடர்ந்து வலி ஏற்படுவதை செர்விக்கோஜெனிக் தலைவலி(Cervicogenic headaches) என்று கூறப்படுகிறது. இது குறித்து மருத்துவர்கள் கூறும் அறிகுறிகள் மற்றும் தீர்வுகளை இப்போது பார்க்கலாம்.


செர்விக்கோஜெனிக் தலைவலி


உடலில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படலாம். கழுத்தில் சிறு வலியும் வீக்கத்தையும் உணரலாம். அதன் தொடர்ச்சியாக தலைவலியும் ஏற்படுத்தும். சில நேரங்களிலே தலைவலி குணமாகிவிடும். ஏன் இப்படி இருக்கிறது என்றது பற்றி யோசனை செய்தீர்களா? இதற்குப் பெயர் தான் செர்விக்கோஜெனிக் தலைவலி(Cervicogenic headaches). இதனை பற்றி மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை தற்போது பார்க்கலாம்.


தலைவலி என்பது பொதுவாக எல்லோருக்கும் ஏற்பட கூடிய ஒன்று. இது முக்கியமாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்குபவர்கள், அதிகமாக கோபப்படுபவர்கள்,போன்றவர்களுக்கு தலைவலி உண்டாக வாய்ப்பு உள்ளது.ஆனால் செர்விக்கோஜெனிக் தலைவலி(Cervicogenic headaches) கொஞ்சம் வித்தியாசமானது. கழுத்தில் அதிக வலி ஏற்படும். வாசனை, அதிக சத்தம், மன அழுத்தம் மற்றும் பிடிக்காத சில விஷயங்கள் நடைபெறும்போது இந்த தலைவலி ஏற்படும்.


அறிகுறிகள்


செர்விக்கோஜெனிக் தலைவலி (Cervicogenic headaches) இருக்கும்போது குமட்டல், வாந்தி மயக்கம் உண்டாகும். கை, தோள்பட்டை பகுதிகளில் வலி உண்டாகும். கழுத்துப் பகுதி வலுவிலந்து போகும். கழுத்தை எந்த பக்கத்திலும் திருப்பமுடியாத சூழல் உண்டாகும். பெரும்பாலும் இந்த வலியானது அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் போன்றவர்களுக்கு உண்டாகும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது கட்டாயமாகும்.


செர்விக்கோஜெனிக் தலைவலிக்கு சிசிச்சை


முதலில் தலைவலி ஏற்படும் சூழல்களை தவிர்ப்பது அவசியம். அதே போன்று வெயிலில் அதிக நேரம் இருப்பது, அதிக வெப்பம் இருக்கும் இடத்தில் பணியாற்றுவது, headphones, perfumes பயன்படுத்துவது, இரவு நேரங்களில் டிவி, மொபைல், இரவு பயணம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லதாக இருக்கும். செர்விக்கோஜெனிக் தலைவலியை கண்டுகொள்ளாமல் இருந்தால், இது கழுத்தை முதலில் பாதிக்கும். மேலும் இதற்கான Triggering  theraphy மூலம் வலி முடிச்சுக்களை குணப்படுத்தலாம். இந்தச் சிகிச்சையில் வலி முடிச்சுக்கள்  தூண்டப்பட்டு சரி செய்யப்படும். தொடர் சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதன் மூலம் செர்விக்கோஜெனிக் தலைவலியிலிருந்து விடுபடலாம். இதற்கு மருத்துவரை அணுகினால் அவர்கள் கொடுக்கும் மாத்திரைகளை காலத்திற்கும் எடுத்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தலைவலியில் இருந்து விடுபடலாம் என மருத்துவர்கள் ஆலோசனைகளை தெரிவிக்கின்றனர்.


தவிர்க்க வேண்டியது


செர்விக்கோஜெனிக் தலைவலி இருந்தால் எதையெல்லாம் தவிர்க்கலாம் என்பது பற்றி மருத்துவர்கள் கூறியதாவது, தூக்கமின்மை, புகைப்பிடித்தல், மது அருந்துதல், அடிக்கடி தலை குளித்தல், குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கின்றனர். மேலும், குளிர்ச்சியுள்ள உணவுகளை சாப்பிடாமல் இருக்க வேண்டும். குறிப்பாக ஐஸ்கிரீம், குளிர்பானம் உள்ளிட்டவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.