புகைப்பிடிப்பது உடல்நலத்துக்கு மட்டுமில்லை உடலுறவுக்கும் கெடு என்கிறது மருத்துவம். அதில் இருக்கும் நிக்கோட்டினே உங்களது செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கப் போதுமானது என்கிறார் பாலியல் நிபுணர். நிக்கோட்டின் ரத்த ஓட்டத்தை பாதிப்பதால் ஆண்மை குறைபாடு ஏற்பட இரண்டு மடங்கு அதிகம் வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறுகிறார். உலக சுகாதார நிறுவனம் மொத்தம் 1.5 மில்லியன் பேர் உலக அளவில் புகைப்பிடிப்பதாகச் சொல்கிறது. இதில் அமெரிக்காவில் மட்டும் 46 மில்லியன் பேர். அமெரிக்கர்களில் 40 மில்லியன் பேர் செக்ஸ் வாழ்க்கையற்ற திருமண உறவில் இருப்பதாகப் புகார் கூறியிருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லைதானே. .
சாதாரணமாக ஒரு சிகரெட் உங்களது செக்ஸ் வாழ்க்கையை எப்படியெல்லாம் பாதிக்கும் தெரியுமா?
1. உடலுறவில் உங்கள் இயங்குதலை கட்டுப்படுத்தும்
செக்ஸ் மகிழ்ச்சியானதாக இருக்க பாலுணர்வும் சீராக இருக்க வேண்டும்.அதற்கு ரத்த ஓட்டம் சீரானதாக அமைய வேண்டும்.பிறப்புறுப்புகளில் ரத்த ஓட்டம் தடைபடும்போது பாலுணர்வால் தூண்டப்படுவதும் குறையும் அதனால் இயல்பாகவே உங்களது இயங்குதலும் கட்டுப்படுத்தப்படும்.
2. சீக்கிரமே முடியும் செக்ஸ்
சிகரெட் உடலில் கார்பன் மோனாக்ஸைட் அளவை அதிகரிக்கும் அது ஆண் பெண் இருவரிலும் டெஸ்டோஸ்டெரோன் உற்பத்தியைக் குறைக்கும். இதனால் நீண்ட நேரம் நீடிக்காமல் செக்ஸ் தொடங்கிய வேகத்திலேயே முடிந்துவிடும் என்கிறார் நிபுணர்.
3.கருத்தரிப்பதில் சிக்கல்
சிகரெட் செக்ஸ் மட்டுமல்லாமல் கருத்தரிப்பதிலும் சிக்கல் ஏற்படுத்தும். சிகரெட் புகைப்பதால் விந்தணு வெளியேறுவதில் எண்ணிக்கை குறைவது தொடங்கி வெளியேறும் விந்தணுக்களும் உருவம் சிதைந்து திறன் குறைந்ததாகவே அமையும்.அதனால் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படும் என்கிறார் மருத்துவர்
4. பெண்களிலும் பாதிப்பு
புகைப்பிடிப்பது ஆண்களில் மட்டுமல்ல பெண்களையும் பாதிக்கும். அதிகம் புகைப்பிடிக்கும் பெண்களில் மாதவிடாய்க்கு முந்தைய பி.எம்.எஸ். மிகவும் சிக்கலானதாக இருக்கும் என்றும் மாதவிடாய் மிகச் சிறிய வயதிலேயே நின்று போக வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.மேலும் ஆண்களைப் போலவே பெண்களுக்கு உடலுறவு சமயத்தில் இயங்குவதில் சிக்கல் ஏற்படலாம்.
5. பாலியல் நோய்களுக்கான வாய்ப்புகள் அதிகம்
சிகரெட் பிடிப்பது உடலின் எதிர்ப்பு சக்தியைக் கட்டுப்படுத்தும் என்பதால் பாலியல் ரீதியான நோய்கள் பாதிக்க வாய்ப்புகளும் அதிகம். குறிப்பாக ஆணுறுப்பை பாதிக்கும் ’பெய்ரோன்ஸ் டிசீஸ்’, மற்றும் பாலியல் ரீதியாகத் தொற்றும் பாப்பிலோமா வைரஸ் பரவல் ஆகியவை சிகரெட் அதிகம் புகைப்பவர்களில் எளிதாகப் பரவும் என்கிறார்கள்.
ஆக, ஆயுள் முழுக்க சிகரெட் பிடிக்கிறேன் எனக்கு ஒன்றுமே ஆகவில்லை நன்றாகத்தா இருக்கிறேன் என நீங்கள் மார்தட்டிக் கொண்டாலும் அதே ஆயுள் முழுக்க உங்கள் செக்ஸ் வாழ்வை சிகரெட் புகைப்பது பாதிக்கிறது என உறுதிபடுத்துகின்றன ஆய்வுகள். இதைவிட புகைப்பழக்கத்தை நிறுத்த சரியான காரணம் வேண்டுமா என்ன?