வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களா நீங்கள். உங்களுக்குத்தான் இந்தத் தகவல். 2021ஆம் ஆண்டுக்கான பல்வேறு பணியிடங்களுக்கான 221 காலி பணியிடங்களுக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்தியா போஸ்ட் நிர்வாகம் அறிவித்துள்ளது. போஸ்டல் அசிஸ்டெண்ட், சார்டிங் அசிஸ்டெண்ட், மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப், போஸ்ட்மேன் ஆகிய காலி பணியிடங்களுக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவின்கீழ் விண்ணப்பிக்கலாம் என்று இந்தியா போஸ்ட் அறிவித்துள்ளது.


ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை நவம்பர் 12ஆம் தேதிக்குள் உதவி இயக்குநர் (ஆர்&இ), முதுநிலை பொது தபால் அலுவலர், டெல்லி, மேக்தூத்பவன், புது தில்லி - 110001 என்ற முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் அல்லது ரெஜிஸ்டெர்டு போஸ்ட் மூலமாக  விண்ணப்பிக்கலாம்.




மொத்தம் 221 காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் போஸ்டல் அசிஸ்டெண்ட், சார்டிங் அசிஸ்டெண்ட் பணிக்கு 72 பேரும், போஸ்ட்மேன் மற்றும் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் பணியிடங்களுக்கு 90 பேரும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.


இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100 வசூலிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் கணினி மயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு அஞ்சலகத்தில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
போஸ்டல் அசிஸ்டெண்ட் மற்றும் சார்டிங் அசிஸ்டெண்ட் பணிக்கு 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சார்டிங் அசிஸ்டெண்ட் பணிக்கு 18 முதல் 25 வயது வரையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்தியா போஸ்டின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான www.indiapost.gov.in  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.