தொழில்நுட்ப வளர்ச்சி ! இன்றைக்கு அனைத்து பொருட்களையும் ஆன்லைனிலேயே வாங்கிக்கொள்கிறோம். பால், பழங்கள், மளிகை பொருட்கள் வரை ஆர்டர் செய்வதில் இருந்து நம்மில் பெரும்பாலோர் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களை நம்பியே இருக்கிறோம். இந்த சூழலில் சிலர் மருந்துப்பொருட்களையும் கூட ஆன்லைனில் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். முடிந்த வரையில் மருத்துவரை அணுகி சம்பந்தப்பட்ட மருந்துகளை எடுத்துக்கொள்ளலாமா என கேளுங்கள் ! அது பரிந்துரைக்கப்பட்ட மருந்துதான் என்றால் ஆன்லைனில் வாங்குவதற்கு முன்னதாக கீழ்க்கண்ட விஷயங்களை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் .
இணையதள தேர்வு :
மருந்துகளை வாங்க நீங்கள் தேர்வு செய்யும் இணையதளங்களையோ அல்லது செயலிகளையோ நன்கு அறிந்தவர்களிடம் தகவலை கேட்டு பெறுங்கள் ஒரு முறைக்கு பலமுறை உறுதிப்படுத்தப்பட்ட பிறகே நீங்கள் மருந்தினை வாங்க வேண்டும் . இல்லையென்றால் காலாவதியான மருந்தினையோ அல்லது தவறான மருந்தினையோ நீங்கள் பயன்படுத்த நேரலாம்.
மருந்து குறித்த தகவலை விசாரிக்கவேண்டும் :
சில மருந்துகள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியான அட்டைகளை கொண்டிருக்கும் எனவே மருந்தை ஆர்டர் செய்வதற்கு முன், மருந்தைப் பற்றிய தேவையான அனைத்து தகவல்களும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் சந்தேகங்களைத் தீர்க்க வாடிக்கையாளர் மையத்தை தொடர்புக்கொண்டு பேசலாம்.
மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை வாங்காதீர்கள்
நீங்கள் ஒரு மருத்துவரை அணுகி அவர்களிடமிருந்து சரியான மருந்துச் சீட்டை பெற்று அதன் மூலம் மருந்தினை வாங்குங்கள் . இணையத்தில் பெறப்பட்ட பகுதி அறிவின் அடிப்படையில் நீங்களாக ஒரு மருந்தினை வாங்கி பயன்படுத்தினால். சுய-கண்டறிதல் உங்கள் நோயாளியின் ஆரோக்கியத்தை மேலும் மோசமாக்கலாம்.
சரிபார்க்கவும் :
ஆன்லைனில் மருந்துகளை ஆர்டர் செய்யும் போது, பல நேரங்களில், மக்கள் முட்டாள்தனமான தவறுகளை செய்கிறார்கள். நீங்கள் சரியான மருந்துகளை ஆர்டர் செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்த, உங்கள் மருந்துச் சீட்டுடன் உங்கள் ஆர்டரைப் பொருத்துவதை உறுதிசெய்யவும்.
பில்லை பத்திரமாக வையுங்கள் :
நம்மில் பலருக்கும் இருக்கும் பழக்கம் . பொருட்களை வாங்கியவுடன் பில்லை தூக்கி வீசுவதுதான். ஆனால் ஆன்லைனில் மருந்துப்பொருட்களை வாங்கும் பொழுது அப்படியாக எதையும் செய்துவிடாதீர்கள். ஏனென்றால் வ்ற்பனையாளரின் ஆர்டரில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், அதனை மாற்றவோ அல்லது பணத்தைத் திரும்பப் பெறவோ உதவியா இருக்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்