சுரைக்காயில் அதிக நீர்ச்சத்து உள்ளது. சுரைகாயை சமைத்து சாப்பிடுவது எவ்வளவு நல்லதோ, ஜூஸாக குடிப்பதும் அவ்வளவு நல்லது என கூறப்படுகிறது. நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள தவறும் ஊட்ச்சத்துகள் நிறைந்த காய்கறிகளில் சுரைக்காயும் ஒன்று. சுரைக்காய் சாற்றில் பொட்டாசியம், வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதை மருத்துவரின் ஆலோசனை பெற்று நீங்கள் உங்கள் உணவில் அளவோடு சேர்த்து பலன் பெறலாம்.
சுரைக்காய் ஜூஸில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. சுரைக்காயில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவாகவும், நார்ச்சத்து மிக அதிக அளவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், மினரல்ஸ், போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் சுரைக்காயில் நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
சுரைக்காய் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்கும் என்ன சொல்லப்படுகிறது. சுரைக்காய் சாறு உடலில் ஏற்படும் வலி மற்றும் அழற்சியை தணிக்கும் என கூறப்படுகிறது. செரிமான பிரச்சனைகளுக்கு சுரைக்காய் ஜூஸ் நல்ல பலன் தரும் என்று கூறப்படுகின்றது. சுரைக்காய் ஜூஸ் அஜீரணக் கோளாறுகளுக்கு சிறந்த தீர்வாக அமையும் என்றும், சுரைக்காயில் உள்ள நார்ச்சத்து, உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்து மலச்சிக்கல் மற்றும் மூல நோய் போன்றவற்றிற்கு நிவாரணம் தரும் என்றும் சொல்லப்படுகின்றது.
சுரைக்காய் விதைககள் மூலம் செரிமான மண்டலத்தை தூய்மைப்படுத்தலாம் என்றும் அதன் முலம் மலச்சிக்கலை தவிர்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. சுரைக்காயில் 80 சதவீதத்துக்கும் மேல் நீர்ச்சத்து மட்டுமே இருப்பதால் அஜீரணம், மெட்டபாலிசம் போன்றவற்றைத் துரிதப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும் என கூறப்படுகிறது.
சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும்,வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது என சொல்லப்படுகிறது.
சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பித்தம் சமநிலை அடையும் என்றும், சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.
மேலும் படிக்க
Pumpkin Puli Kulambu: மஞ்சள் பூசணிக்காயில் ஒரு சுவையான புளிக்குழம்பு செய்யலாம்.. செய்முறை இதோ