பகல் முழுவதும் மனதுக்கும், உடலுக்கும் அவ்வளவு வேலையை கொடுத்துவிட்டு, அவை இளைப்பாற கூட நேரம் தராமல் சென்று கொண்டிருக்கிறது இந்த நாகரிக உலகம். என்ன புரியவில்லையா.. தூக்கத்தைதான் சொல்கிறேன்.
ஆகச்சிறந்த அருமருந்தான தூக்கத்தை தொடர்ந்து தவிர்த்து வருவதால் இன்று மக்கள் மாத்திரைகளின் பிடியில் சிக்கி திண்டாடி வருகின்றனர். இன்னும் சிலரோ தூக்கம் வராமல் தவித்து வருகின்றனர். இது ஒரு புறம் மக்கள் சென்று கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பிறந்த மேனியாக தூங்கினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என ஆராய்ச்சி நடத்தியிருக்கிறார்கள்.
இந்தியாவை பொறுத்தவரை வெறும் 2 சதவீதத்தினர் மட்டும்தான் பிறந்த மேனியாக தூங்குவதாக ஆராய்ச்சிகள் சொல்கிறார்கள். ஆனால் அமெரிக்காவில் 100 -இல் 40 சதவீத மக்கள் பிறந்த மேனியாக தூங்குகிறார்களாம். அதுதான் அவர்களுக்கு பிடிக்கவும் செய்கிறதாம். இது பலவித நன்மைகளை தருவதாகவும் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சரி இப்ப மேட்டருக்கு வருவோம்.. இப்படி பிறந்த மேனியா தூங்குவதனால் கிடைக்கும் நன்மைகள் கிடைக்கும் கீழே:-
1. இப்படி ஆடை இல்லாமல் தூங்குவதினால், நமது இரத்தம் சீக்கிரம் குளிர்ச்சியடைந்து விடும். இதனால் சீக்கிரமாக தூக்கத்திற்கு சென்றுவிட முடியும்.
2. ஆழ்ந்த தூக்கம் சொந்தமாகும்.
3. நாள் முழுவதும் ஆடை அணிந்திருப்பதால், தோலில் உள்ள செல்கள் தங்களை புதுப்பித்துக்கொள்வதில் சிரமம் ஏற்படும். ஆனால் பிறந்த மேனியாக தூங்கும் போது அது மிக சீராக நடைபெறும். இதனால் தோல் பளபளப்பாக இருக்கும்.
4. இறுக்கமான ஆடைகள் மன அழுத்தத்தை அதிகமாக கொடுக்கும். ஆனால் இப்படி தூங்குவதால் அதிகப்படியான மன அழுத்தம் குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
5. அதிக எடை கூடுவதும், இதனால் தடுக்கப்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்