ஆரோக்கியமான டயட் குறித்து நடிகர் அர்னால்டு சில டிப்ஸ்களை வழங்கியுள்ளார்.
அர்னால்டு
7 முறை மிஸ்டர் ஒலிம்பியா பட்டம் வென்றவர் நடிகர் அர்னால்டு. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான டெர்மினேட்டர் படத்தில் இயந்திர மனிதனாக தோன்றி முன்னணி ஹாலிவுட் நடிகர்களை கதிகலங்க வைத்தவர். தற்போது 76 வயதாகும் அர்னால்டு தொடர்ந்து படங்களில் நடித்து வருவதும் இளைஞர்களுக்கு பாடி பில்டிங் பற்றிய ஆலோசனைகலையும் தொடர்ந்து வழங்கி வருகிறார்.
நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில் தற்போது Fubar என்கிற தொடரில் நடித்து வருகிறார் அர்னால்டு. இந்த தொடரின் முதல் சீசன் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் வெளியாக இருக்கையில் உடல்நலக்குறைவால் அர்னால்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதய துடிப்பு சீராக இல்லாததாக மருத்துவ பரிசோதனையில் தெரியவர இதயதுடிப்பை சீராக்கும் செயற்கை கருவியான பேஸ்மேக்கர் அவரது உடலில் பொறுத்தப்பட்டுள்ளது. இதனால் மனச்சோர்வு அடையாமல் பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு இது குறித்து நகைச்சுவையாக "தானும் இயந்திரம் போல் மாறி வருவதாக" அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் Fubar Season 2 விரைவில் வெளியாகும் என்றும் அவர் உறுதியளித்தார்.
ஆரோக்கியமான உடலுக்கு ஹெல்த் டிப்ஸ்
சமீபத்தில் உடல் ஆரோக்கியம் குறித்தும் டயட் கடைபிடிப்பது குறித்து பேசிய அர்னால்டு வழக்கமான சில வழிமுறைகள் இல்லாமல் வித்தியாசமான சில அனுகுமுறைகளை பரிந்துரைத்துள்ளார். உடல் ஆரோக்கியத்தை பேண டயட் கடைபிடிக்கும் பலர் முதலில் செய்வது சர்க்கரை, கார்போஹைட்ரேட் உள்ள உணவுப் பொருட்களை தவிக்கிறார்கள். சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வராமல் இருக்க மருத்துவர்களும் சர்க்கரை உள்ள உணவுப் பொருட்களையே தவிர்க்க பரிந்துரைக்கிறார்கள்.
ஆனால் இப்படி திடீரென்று நமக்கு பிடித்த உணவுப் பொருட்களை மொத்தமாக கைவிட்டு தீவிரமாக ஒரு டயட் பின்பற்றுவது மன உளைச்சலை ஏற்படுத்த கூடியதாக அமையலாம் என்று அர்னால்டு கூறியுள்ளார். ஒரு சில உணவுப் பொருட்கள் இயல்பாகவே நம் குடல் வலத்தை ஆரோக்கியமானதாக மாற்றி நம் மூளைக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் ஹார்மோன்களை சுரக்க உதவக்கூடியவை .இதன் விளைவாக மனச்சோர்வை மனவுளைச்சலும் குறையும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சபீபத்திய ஆய்வொன்றை அவர் சுட்டிகாட்டினார்.
ஒரு நல்ல டயட் என்பது எந்த வகையிலும் நாம் நிர்ணயித்துக் கொண்ட லட்சியத்தில் தோற்றுவிடோமோ என்கிற பதற்றத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். இதெல்லாம் தான் சாப்பிடனும். இதெல்லாம் சாப்பிடக் கூடாது என்று ரூல்ஸ் போட்டு அதை பின்பற்றும் போது இயல்பாகவே நம்மை எதை செய்ய வேண்டாம் என்று சொல்கிறார்களோ அதை செய்ய நாம் தூண்டப்படுகிறோம் பின் அதற்காக வருத்தமும் படுகிறோம். எந்த உணவு முறையும் அளவாக இருக்கையில் அது பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. நமக்கு பிடித்தமான உணவுகளை ஒரு மொத்தமாக தவிர்க்காமல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை சாப்பிட்டும் ஒரு ஆரோக்கியமான டயட்டை பின்பற்ற முடியும். ஆனால் அதை மொத்தமாக தவிர்க்கையில் நாம் மனச்சோர்வை அடையலாம் என்று அர்னால்டு கூறியுள்ளார்.
உடற்பயிற்சி, தியானம் , மற்றும் காய்கறிகள் , கடல் உணவு வகைகள் உள்ளிட்டவை நம் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்க உதவக்கூடியவை. அதே நேரத்தில் உங்களை மனவுளைச்சலுக்கு தள்ளாத ஒரு உணவுப்பழக்கமே முக்கியமானது என்று அர்னால்டு கூறியுள்ளார்.