பீரியட்ஸ் நேரத்தில் உடலை சுத்தமாக பராமரிப்பது அவசியம்.  சுத்தமாக இல்லை என்றால் உடலில் துர்நாற்றம் வீச தொடங்கும். மேலும், அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சனைகளில் தொடங்கி, அது தொற்று நோய்களுக்கு வழி  வகுக்கும்.  இதில் இருந்து  தப்பிக்க சில சுத்தமாக இருக்க சில நடவடிக்கைகளை பின்பற்ற  வேண்டும்.


 



  • மென்ஸ்ட்ருல் கப் - மாதவிடாய் நேரத்தில் அதிகம் பேட்களை பயன்படுத்தி களைத்து போய் இருந்தீர்கள் , இதனால், வரும் அரிப்பு, எரிச்சல் இருந்தால் அதற்கு மென்ஸ்ட்ருல் கப்  ஆகும். இது வெவ்வேறு அளவுகளில் கிடைக்கும். ஒரு முறை வாங்கினால்,  குறைந்தது ஒரு 5 வருடங்கள் வரை பயன்படுத்தலாம். சுத்தமாக வும்,எந்த வலியும் , தொந்தரவும் இல்லாமல்  இருக்கும்.





  • பேன்ட்டி லைனெர்ஸ் - அளவுக்கு அதிகமாக வெள்ளை படித்தல் ஸ்பாட்டிங் போன்ற தொந்தரவுகள் பிரச்சனைகள் இருந்தால், இது மிகவும் உதவியாக இருக்கும். சுத்தமாக இருக்கவும் உதவும். நீண்ட நேரம் ஈரப்பதத்துடன்  இருப்பது, தொற்று நோய்கள் வருவதற்கு காரணமாக இருக்கும். அதனால் இது போன்ற பேன்ட்டி லைனெர்ஸ் பயன்படுத்தலாம்.





  • இன்டிமேட் வாஷ் - அதாவது பிறப்பு உறுப்பு பகுதியில் இருக்கும் தோல் மிகவும் மென்மையாக இருக்கும். அங்கே கடினமான சோப் பயன்படுத்தி அடிக்கடி கழுவ கூடாது. மருத்துவரின் பரிந்துரையின் பேரில், இன்டிமேட் வாஷ் வாங்கி பயன்படுத்துவது தோலின் pH சமநிலையில் வைக்க உதவும். இதனால் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு

  • இன்டிமேட் வெட் வைப்ஸ் - இண்டிமேட் வாஷ் கிடைக்காத இடங்களில் இதை பயன்படுத்தி பிறப்பு உறுப்புகளை சுத்தப்படுத்தி கொள்ளலாம்.





  • பவுடர் - குறிப்பாக அக்குள், மற்றும் தொடை பகுதிகளில் அதிகமாக வேர்த்து ஒவ்வாமை மற்றும் அரிப்புகள் வரும். அந்த இடங்களில் பவுடர் பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கு என்று இருக்கும் பவுடர்களை பயன்படுத்த வேண்டும்.





  • டாய்லெட் சீட் கவர்கள் - பொது இடங்களில் கழிப்பறையை பயன்படுத்தும் போது , தொற்று பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதை தவிர்க்க இந்த கவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எதிர்த்து விடலாம்.




இது போன்று சில பொருள்களை பயன்படுத்தி, உடலின் சுத்தத்தை  பராமரிக்கலாம்.இது மிகவும் முக்கியானது. இதில் இருந்து நிறைய தொற்று நோய்கள், பிறப்பு உறுப்பில் எரிச்சல், வலி, மற்றும் உடலுறவின் போது வலி, தோலின் நிறம் மாறி இருத்தல் போன்ற பிரச்சனைகள் வரும். இதனால், ஆண்கள் பெண்கள் இருவரும், உறுப்புகளை சுத்தமாக வைத்து இருப்பது அவசியம்.  இது  ஒருவரின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. தனி மனித சுத்தம் பெரிய மாற்றத்தை  ஏற்படுத்தும்.