ஐதராபாத்தின் நிஜாம்பேட் எஸ்.எல்.ஜி மருத்துவமனையின் மருத்துவர்கள் கடந்த செவ்வாயன்று 50 வயது பெண் ஒருவரிடமிருந்து 6 கிலோ எடையுள்ள  ஃபைப்ராய்ட் கட்டியை வெற்றிகரமாக அகற்றியதாகத் தெரியவந்துள்ளது. கருப்பை வாயில் இருந்து உருவாகும் ஃபைப்ராய்ட் கட்டிகள் நாளடைவில் எண்ணிக்கை உயர்ந்து, கருப்பை/கர்ப்பப்பை முழுவதையும் சுருக்கி, கடுமையான முதுகுவலியை ஏற்படுத்துகிறது.


சம்பந்தப்பட்ட பெண் கடுமையான முதுகுவலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மேலும் இதனால் அவரது வயிறு மிகவும் விரிவடைந்துள்ளது. அல்ட்ராசவுண்ட் மற்றும் சிடி ஸ்கேன் உள்ளிட்ட சோதனைகள், ஃபைப்ராய்ட் கட்டிகள் இருப்பை வெளிப்படுத்தியது என அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்தனர்.






இதை அடுத்து மூத்த மகப்பேறியல், மகப்பேறு மருத்துவர் மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். சிரிஷா முல்லமுரி கூறுகையில், “குடல், இரத்த நாளங்கள், சிறுநீர்க்குழாய்கள், சிறுநீர்ப்பை போன்றவற்றின் மீது ஃபைப்ராய்ட் கட்டிகளின் அழுத்தம் இருந்தது மற்றும் இது சுற்றியுள்ள உறுப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் சிக்கலை உணர்ந்து தேர்ந்த மருத்துவர்கள் குழு இதற்கு அறுவை சிகிச்சை செய்தது, அதனால் அவருக்கு குறைந்த இரத்தப்போக்கு இருந்தது, ”என்று டாக்டர் முல்லமுரி கூறினார்.


இந்த அறுவைசிகிச்சை குறித்து புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஸ்ரீகாந்த் சோமா கூறுகையில், இரண்டு சிறுநீர்க்குழாய்களையும் அவற்றின் இயல்பான உடற்கூறுகளிலிருந்து இந்த கட்டிகளால் தள்ளப்பட்டிருந்தது. "கவனமாகப் பிரித்தெடுப்பதன் மூலம், அறுவைசிகிச்சைக்கு இரத்த இழப்பு குறைவாக ஏற்படும் பகுதியை எங்களால் அடைய முடியும், மேலும் சிறுநீர்க்குழாய் காயமும் இதனால் தவிர்க்கப்பட்டது," என்று அவர் கூறினார்.


அறுவை சிகிச்சை முடிந்து மூன்று வாரங்களில், நோயாளி குணமடைந்து, இயல்பு வாழ்க்கை வாழ முடியும் என, டாக்டர்கள் மேலும் தெரிவித்தனர்.